தீனா படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இந்தி சினிமா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ். தற்போது அவர் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா நடித்துள்ளார். வில்லனாக இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார். படம் குறித்து ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது,

“என் படங்களில் இருக்கும் எல்லா விசயங்களும் தர்பார் படத்திலும் இருக்கும். ஆனால் அந்த விசயங்களை ரஜினி சாருக்கு ஏற்றாற்போல சொல்லி இருக்கிறேன். நிச்சயமாக இந்தத் தர்பார் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்