கே.ஜி.எப் என்ற படம் கன்னட சினிமாவில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி பல தயாரிப்பாளர்களை பெரிய படங்களை தயாரிக்க வைத்தது. அதன் வழி தற்போது கன்னடத்தில் ரக்‌ஷித் செட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அவனே ஸ்ரீமன் நாராயணா. இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட இருக்கிறது ஸ்கிரீன் சீன் நிறுவனம். புஷ்கர் பிலிம்ஸ் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சச்சின் இயக்கியுள்ளார். இப்படம் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி இருப்பது ட்ரைலரில் தெரிந்தது. கே.ஜி.எப் படத்திற்கு பிறகு இப்படம் பெரிதாக ஈர்க்கப்படும் என்று படக்குழுவினர் நேற்று நடைபெற்ற படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்து இருந்தார்கள்