அட்டக்கத்தி படத்தில் இயக்குநராக அறிமுமாகி மெட்ராஸ் படம் மூலமாக தனது முத்திரையை ஸ்ட்ராங்காகப் பதித்த இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் ரஜினியின் கபாலி, காலா படங்கள் மூலமாக தனக்கென தனிப்பாணியைப் பிடித்தார். தற்போது நீலம் புரொடக்சன் மூலம் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கெனவே அவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

  • அதைத் தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன் மூலமாக ஐந்து படங்களை தயாரிக்க இருக்கிறார். அவரோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களும் இணைகின்றன. இந்தப்படங்களை, இயக்குநர் மாரி செல்வராஜ், லெனின்பாரதி, மோசஸ், ப்ராங்க்ளின், சுரேஷ்மாரி ஆகியோர் தலா ஒரு படங்களை இயக்குகிறார்கள்