2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு என்றாலே மக்கள் நினைவிற்கு வருவது இளைஞர்கள் நடத்திய மெரினா போராட்டம் தான். அந்தளவிற்கு அதன் தாக்கம் தேசமெங்கும் பரவியது.

அனல் தெறித்த அதே நேரம் கண்ணியம் குறையாமல் நடந்த அந்தப்போராட்டத்தை வன்முறையோடு முடித்து வைத்தது காவல்துறை.

இந்தப்போராட்டம் பற்றி நிறையபேர் நிறைய எழுதி இருக்கிறார்கள். ஆனால் யாரும் இதை திரை வடிவமாக கொண்டு வர முயற்சிக்கவில்லை. அந்த முயற்சியை எடுத்தவகையில் இயக்குநர் எம்.எஸ் ராஜ் பாராட்டுதலுக்குரியவர்.

என்னதான் படம் ஒரு திரைப்படம் போல துவங்கினாலும் படம் நெடுக வரும் வரலாற்றுச் செய்திகளும் எண்ணற்ற தகவல்களும் ஒரு ஆவணப்படம் பார்க்கும் உணர்வைத் தான் தருகிறது.

ஆனாலும் இதை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்ற அந்தப் பொறுப்புணர்வை மெச்சத்தான் வேண்டும். படத்தில் டெக்னிக்கலாக எந்த மெனக்கெடலும் இல்லை. முழுக்க முழுக்க ஒரு படமாக மெரினா புரட்சி முழுமை பெறவில்லை என்றாலும் ஒரு நல்ல பதிவாகவும் வரலாற்றுச் சான்றாகவும் இப்படம் இருக்கும்