எத்தனையோ சமுதாய கருத்துள்ள படங்களை இயக்கி புரட்சி இயக்குநர் எனப்பெயரெடுத்த எஸ்.ஏ சந்திரசேகர் சென்ற வருடம் ட்ராபிக் ராமசாமி என்ற கருத்தாழமிக்க படத்தை எடுத்திருந்தார். இளைஞர்களிடையே அது போதுமான வரவேற்பைப் பெறவில்லை. தற்போது இளைஞர்களின் பல்ஸ் பிடித்து ஒருபடம் எடுத்துள்ளார். அதுதான் கேப்மாரி.

நான் இப்பவும் யூத்டா என்று யூத்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு படமெங்கும் துள்ளலான விசயங்களை அடுக்கி இருக்கிறார் எஸ்.ஏ.சி. நாயகன் ஜெய் நாயகி வைபவி சாண்ட்லியா இருவரும் ரயிலில் மீட் செய்து ஒருவருக்கொருவர் தங்களையே பரிமாறிக்கொள்கிறார்கள். அதோடு இரு வருடம் கழித்து இருவரும் மறுபடியும் மீட் பண்ண அவர்களுக்கு கல்யாணம் நடக்கிறது. இவர்களின் இல்லறத்திற்குள் படத்தின் இன்னொரு நாயகி அதுல்யாரவி நுழைகிறார். அதன் பின் ஜெய்யின் கல்யாண லைப் என்னானது என்பது தான் கேப்மாரி கதை.

கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம் மாறிமாறி விளையாடுவதில் ஜெய் கில்லாடி. அதனால் தான் படத்திற்கு கேப்மாரி என்ற டைட்டில் என பெயர் விளக்கத்திலே அவ்வளவு குறும்பு. ஜெய் வைபவி சாண்ட்லியா அதுல்யா ரவி, உள்பட படத்தின் நட்சத்திரங்கள் அனைவருமே நடிப்பில் தூள். வைபபி சாண்ட்லியா ஒருபடி மேல் ஏறி அசத்தி இருக்கிறார்.

படத்தில் பக்கத்திற்குப் பக்கம் வசனங்கள் வெகுவாக ஈர்க்கின்றன. முழுக்க முழுக்க 2K கிட்ஸை குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது படம். அதனால் கலாச்சார காவலர்களுக்கு படம் கொஞ்சம் கசக்கலாம்.

ஒரு அபார்ட்மென்ட் மற்றும் சிலபல லொக்கேஷனில் எடுக்கப்பட்ட என்ற எண்ணம் தோன்றவே இல்லை. அந்தவகையில் கேமராமேன் ஜீவன் தன் உழைப்பிற்கு ஜீவனைக் கொடுத்துள்ளார். இசை அமைப்பாளர் சித்தார்த் விபின் இசையிலும் கலக்கி நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்.

படத்தில் முன்பாதியில் இருந்த ஜாலி பின்பாதியிலும் தொடர்வதால் நிச்சயம் இந்த கேப்மாரி மாறி மாறி ஆடியன்ஸை தியேட்டருக்கு இழுப்பார்.