சென்றவாரம் அது ரஜினி வாரம் என்றே சொல்ல வேண்டும். கேரளாவில் பினராயி விஜயன் ஒரு மாற்றுத்திறனாளி இளைஞனோடு எடுத்துக்கொண்ட செல்பி உலகளவில் வைரல் ஆனது. அதற்கடுத்து பிரணவ் என்ற அந்த இளைஞனை தமிழின் ஒரு முன்னணி வார இதழ் பேட்டி கண்டது. அப்பேட்டியில் பிரணவ் ரஜினி சாரையும் சந்தித்து நான் அவருக்காக வரைந்த புகைப்படத்தை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதைக் கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் உடனடியாக அந்த இளைஞனை சந்தித்து அவர் காலால் வரைந்து கையளித்து அப்புகைப்படத்தைப் பெற்றுக்கொண்டார். மேலும் பிரணவ் உடன் போட்டோஸும் எடுத்துக்கொண்டார் ரஜினி. இதை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடித் தீர்த்தனர். இதுதான் சூப்பர் ஸ்டார். இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்