ஒருபடத்தின் எதிர்பார்ப்பிற்கு அப்படத்தின் டைட்டிலும் ஒரு முக்கியக்காரணம். இப்போதெல்லாம் ட்ரெண்டியாக டைட்டில் வைப்பது பேஷனாகி விட்டது. ஆனால் ட்ரெண்டியாக டைட்டில் வைத்தாலும் அப்படத்தின் கதையோடு கனெக்ட் ஆகும்போது தான் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு ஏமாற்றம் இருக்காது. இப்போது குஸ்கா எனும் டைட்டிலோடு ஒரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னை கமலா தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது நேற்றைய நிகழ்வில் தெரியவந்தது. இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். நேற்றைய நிகழ்வில் மயில்சாமி பேசும்போது, “ரசிகர்கள் இப்போது நல்லபடத்தை வெற்றியடைய செய்து விடுகிறார்கள். அதற்கு சமீபத்திய சாட்சி கைதி படம்” என்றார். இதை மயில்சாமி சொல்லும் போது கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.