ஆலாக்கு அரிசியைப் போட்டா யார்னாலும் சோறாக்க முடியும்ன்ற கதையா..கொஞ்சம் மேற்படி சம்பவங்களை அடித்தளமா வச்சா ஈசியா படமெடுத்து ஜெயிச்சிட முடியும்னு நினைத்ததின் விளைவில் தான் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி வந்தது. அதே சிந்தனையில் தான் அர்ஜுன் ரெட்டி தமிழில் ஆதித்யவர்மாவாக மாறி வந்து இருக்கிறது.

படம் தேறி இருக்கிறதா என்பதை விட துருவ் விக்ரம் பாஸ் ஆகிவிட்டாரா என்பது தான் பலரின் கேள்வியாக இருந்தது. ஏன் என்றால் விஜய்தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டியில் அப்படியொரு அதகளம் செய்திருந்தார். அதில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடித்து அசத்தி இருக்கிறார் துருவ் விக்ரம். அழகு ஆக்‌ஷன், எமோஷ்னல் என எல்லா ஏரியாவிலும் அப்பாவிற்கு தப்பாத பிள்ளையாக ஸ்கோர் செய்கிறார். பனிதா சிந்து முகத்தில் சோகத்தை சிந்தியவாரே இருந்தாலும் ஒருசில இடங்களில் மெச்சூட் ஆக நடித்துள்ளார்..பழைய நடிகர் ராஜா, துருவ் விக்ரம் அண்ணனாக நடித்துள்ளவர், நண்பர்களாக நடித்துள்ளவர்கள் என யாரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

முன்பாதியில் படம் மிகவும் ஸ்லோவாக போகிறது. பின்பாதி அதற்கு நேர்மாறாக பயணித்து சிறப்பாக முடிகிறது. 80&90 கிட்ஸுக்கு இப்படம் கொஞ்சம் தடுமாற்றத்தைத் தரலாம். ஆனால் 2K கிட்ஸ் படத்தைத் தலையில் தூக்கி வைப்பார்கள்.

படத்தின் மேக்கிங் மற்றும் கேமரா கோணங்கள் எல்லாம் தரமான வார்ப்பு. முக்கியமாய் அன்பு சார்ந்த வசனங்களை கேரக்டர்கள் மேலோட்டமாகப் பேசினாலும் ஆழமாக எழுதி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நிறைய ஆடியன்ஸ் அர்ஜுன் ரெட்டியை பார்த்துவிட்டதால் அடுத்து என்ன என்ற சுவாரஸ்யமான மேட்டர்ஸ் எல்லாம் மிஸ் ஆகவே செய்கிறது. ஆனாலும் படம் எங்குமே தேங்கிவிடவில்லை. குறிப்பாக க்ளைமாக்ஸ் நேரத்தில் நெஞ்சில் ஓங்கி அறைகிறது. துருவ் விக்ரம் நடிப்பும் இக்கால இளைஞர்களுக்கான சம்பவங்களும் படத்தில் ரசிக்கும் படியாக இருப்பதால் இந்த ஆதித்ய வர்மா யெங்க்ஸ்டர்ஸை கவர்வான்