டி.ஆர் என்றாலே ஒரு சர்ச்சை வெடிக்கும். தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்தால் அனல் பறக்கும்.  பொதுத்தேர்தலில் பங்கேற்று வந்த அவர் தற்போது சினிமா சம்பந்தப்பட்ட தேர்தலிலும் பங்கேற்க இருக்கிறார்.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் டிசம்பர் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் புதிய அணி உருவாகி தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த புது அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் அவர்களும், “மன்னன் பிலிம்ஸ்” மன்னன் அவர்கள் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இந்த அறிவிப்பு கூட்டத்தில் கிருஷ்ணன், E.மணி, நாராயணன், சாய், அரவிந்தன், பன்னீர்செல்வம் மற்றும் பல விநியோகிஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடக்கவுள்ள இந்த சங்கத்தில் 500க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

டி. ராஜேந்தர் – மன்னன் அணியின் தேர்தல் அறிக்கை மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.