“உலக மொழிகளுக்கு ஈடானது வடிவேலுவின் உடல்மொழி” என்று நடிகர் வடிவேலுவைப் பற்றி ஒருமுறை வைரமுத்து குறிப்பிட்டிருந்தார். அது நூறுசதவிகித உண்மை. சமீபத்தில் கூட ஒரு இலக்கிய இதழில் வடிவேலுவின் வசன உச்சரிப்பைப் பற்றி ஒரு ஆர்டிகள் வந்தது. நாம் ஒரு வார்த்தையை உச்சரிப்பதற்கும் வடிவேலு உச்சரிப்பதற்கும் அவ்வளவு வித்தியாசங்கள் உண்டு. நிச்சயம் சமகாலத்தின் ஒரு மகத்தான கலைஞன் வடிவேலு. அவரது சமீபத்திய தீபாவளி கலைந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று வைரல் ஹிட். அந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு ரசிக ரசிகைகள் கலந்துகொண்டு வடிவேலுவின் வசனங்களைப் பேசி அசத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் வடிவேலுவின் முகத்தில் பழைய எனர்ஜி அப்படியே இருந்தது. அவர் மீண்டும் சினிமாவில் ரவுண்டு வந்தால் சினிமாவும் எனர்ஜியாக இருக்கும். மேலும் அவர் தான் நடித்த படங்களிலே மிகவும் கஷ்டப்பட்டு நடித்தது இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படம் தான் என்றார். அதுதான் ஹைலட்