நடிகர் கார்த்தியின் சினிமா கரியரில் சில படங்கள் முக்கியமான வரிசையில் இருக்கும். கைதி படமும் அப்படியான படமாக இருக்க வாய்ப்புள்ளது. இப் படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு பிகில் போடாத ரசிகனே இல்லை எனலாம். ஒத்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு கெத்தாக அமர்ந்திருக்கிறது. ஒரு ராத்திரியில் லாரி டிரைவரின் வாழ்வில் நடக்கும் விசயங்களை வைத்து மிக அற்புதமாக திரைக்கதை அமைத்து தெறித்தன படமாக மாற்றி இருக்கிறாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தத் தீபாவளி கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு இரண்டாவது தல தீபாவளியாக இருக்கும் என்கிறார்கள் டிரேடிங் வட்டாரத்தில் இருப்பவர்கள். மேலும் தளபதி விஜய் ரசிகர்கள் மொத்தபேரும் கைதி படத்தை உறுதியாகப் பார்ப்பார்கள். அதற்கான மெயின் காரணம் கைதி இயக்குநர் தான் விஜய்யின் 64-வது பட இயக்குநர் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆக மொத்தம் இந்தத் தீபாவளிக்கு அத்தனை ரசிகனும் கைதி முன் சரண்டர் ஆகப்போவது உறுதி.