தமிழ்சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப்பட அறிவிப்பு மாஸாக வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற தகவலோடு தற்போது ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று தகவலும் வந்துள்ளது. ஜோதிகா கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பது கன்பார்ம் என்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். விஸ்வாசம் என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு சிறுத்தை சிவா செண்டிமெண்ட் ஆக விஸ்வாசம் டீம் அனைவரையும் இப்படத்தில் களம் இறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு சம்மருக்கு வெளியாக இருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு இப்போதே கொண்டாட்டம் ஆரம்பித்து உள்ளது