ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத 168 வது படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, ‘சிறுத்தை’ சிவா இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.  குடும்பப் பின்னணியில் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளது.

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் வேலையை ரூபன் கவனித்துகொள்கிறார்.

மேலும் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் வேலை செய்த பலர் இதில் வேலை செய்ய இருக்கின்றனர்.

ரஜினிகாந்த் படத்திற்கு முதன்முதலாக டி.இமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.