ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டான்னு தெரியாது. ஆனால் ஓங்கி சிரிச்சா நிறைய பிபி பிரசர் எல்லாம் குறையும். அப்படி குறைக்கும் படமாக வந்துள்ளது பெட்ரோமாக்ஸ் படம்.

தமன்னாவின் ரோலை விட அதிக இடம் படத்தில் முனிஷ்காந்த் கூட்டணிக்குத் தான். படத்தில் அவர்கள் வரும் இடமெல்லாம் அதிரிபுதிரி சிரிப்பு. குறிப்பாக முனிஷ்காந்த் ஒரே செயலுக்கு இரண்டு உணர்வுகளை வெளிப்படுத்தி அதகளப்படுத்தியுள்ளார். அதேபோல் காளிவெங்கட் கரியரில் இப்படம் ஒரு மாஸ்டர் பீஸ். டி.எஸ். கே எனும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் பேய்களிடம் சூர்யா போல் பேசும் காட்சியெல்லாம் அல்டிமேட் காமெடி. சத்யனும் பேய் வருவதற்கான சிம்டெம்ஸ் தெரியும் போதெல்லாம் தன் காதில் உள்ள செவிட்டு மிஷினை கழட்டி அநியாயத்திற்கு சிரிக்க வைத்துள்ளார்.

கதை மிகவும் சிறியது தான். ஒரு வீட்டை விற்க முயற்சிக்கிறார் அதன் உரிமையாளர். ஆனால் அங்கு பேய் இருக்கிறது. அதைப் பொய்யாக்க முனிஷ்காந்த் கூட்டணி அந்த வீட்டிற்குள் செல்கிறது. பின் என்னானது என்பது தான் கதை. இந்தக்கதையை டீசண்டான நரேஷன் மூலமாக சேட்டிஸ்பேட் செய்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். ஜிப்ரானின் இசை படத்திற்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்துள்ளது.

தமன்னா படமெங்கும் வராவிட்டாலும் கதையெங்கும் அவர் இருப்பதால் படத்தின் எனர்ஜி லெவல் குறையவில்லை.

படத்தின் பலவீனம் என்றால் அது முன்பாதி தான்..நல்லவேளை அது முன்பாதியோடு முடிந்து விடுகிறது. தமன்னா அப்பாவாக நடித்திருக்கும் வெங்கடேஷின் ஓவர் ஆக்டிங் சில இடங்களில் சீரியல் பார்த்த பீலீங்கை கொடுக்கிறது. முன்பாதியில் மட்டும் கொஞ்சம் வொர்க்கவுட் பண்ணிருந்தால் படம் இன்னும் தெறிக்க விட்டிருக்கும். இப்போதும் குறையொன்றுமில்லை. குறையில்லாமல் சிரிக்க முடிகிறது.