இப்பதான் 90கிட்ஸை குறிவைத்து வெளியான கோமாளி படம் சக்கைப்போடு போட்டது. தற்போது 90 கிட்ஸோடு, 2K கிட்ஸையும் குறிவைத்து வெளியாகி இருக்கிறது பப்பி.

எல்.கே.ஜி, கோமாளியைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது கமர்சியல் படமாக கவர்ந்திருக்கிறது பப்பி.

பிள்ளை இல்லாதவர்கள் நாட்டில் எவ்வளவோ வேதனைகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் காதல் என்ற பெயரில் இளசுகள் கல்யாணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை ஏந்தி பின் அந்த உயிரைக் கலைத்து கொன்றுவிடுகிறார்கள். இது பெரிய அநீதி. இப்படியொரு காலத்திற்கு தேவையான கதையை கையில் எடுத்திருக்கிறது பப்பி.

நாயகனாக வருணுக்கு நடிப்பு இயல்பாக வருகிறது. செண்டிமெண்ட் காட்சிகளில் மட்டும் இன்னும் கவனமாக இருந்தால் கவனம் ஈர்ப்பார். சம்யுக்தா ஹெக்டே சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். யோகிபாபு தான் படத்தின் பெரிய என்ர்ஜி டானிக். கலக்கி இருக்கிறார். ஒரு செண்டிமெண்ட் காட்சியிலும் அசத்தி இருக்கிறார்.

படத்தின் பட்ஜெட்டை அதிகப்படுத்தி காட்டுபவர் கேமராமேன் தீபக்குமார் பதி தான். ஒளிப்பதிவை மிகத்திறமையாக கையாண்டிருக்கிறார். தரணின் பின்னணி இசை தரமான உழைப்பு.

பின்பாதியில் அழுத்தம் நிறைந்த காட்சிகளால் அசரடித்து இருக்கிறார் இயக்குநர் நட்டு தேவ் என்கிற முரட்டு சிங்கிள். படம் முன்பாதியில் லேசாக பிசிறடித்தாலும் பின்பாதியில் அசரடித்து விடுகிறது. ஒவ்வொரு இளைஞனும் இளம் பெண்ணும் பார்க்க வேண்டிய படம்.