தமன்னா நடிப்பில் பக்கா ஹாரர் படமாக உருவாகி இருக்கும் படம் பெட்ரோமாக்ஸ் Eagle’s eye புரொடக்சன் வழங்கும் இப்படத்தை இயக்கி இருக்கிறார் ரோகின் வெங்கடேசன். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பிரஸ்மீட் சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன்,
“இந்த டைட்டிலுக்கான காரணத்தைப் பலரும் கேட்டார்கள். இது ஹாரர் படம் என்பதால் ஒரு கேட்சியான டைட்டில் வேண்டும் என்று நினைத்தேன். இந்த டைட்டிலின் பவர் அனைவருக்கும் தெரியும். கவுண்டமணி சார் இதை அவ்வளவு பிரமாதமாக மக்களிடம் சேர்த்திருக்கிறார். அதனால் தான் இந்த டைட்டில்” என்றார்.

மேலும் பேய்ப் படம் என்றாலே தமன்னா நடிப்பில் வெளுத்துக்கட்டுவார். அதற்கு தேவி படம் நல்ல உதாரணம். அதோடு இப்படத்தில் தான் மட்டும் சோலோவாக நடித்து புகழ்பெற நினைக்காமல் காளிவெங்கட், சத்யன், முனிஷ்காந்த், மிமிக்ரி மன்னன் டி.எஸ்.கே ஆகியோருடன் களம் கண்டுள்ளார். அதனால் ஹாரர் காமெடியில் படம் பட்டயக்கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.