பெண்ணியம் பேசும் படங்கள் தொடர்ந்து வெளிவருவது சினிமாவிற்கு மட்டும் அல்ல சமூகத்திற்கே ஆரோக்கியம். சமீபத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள மிகமிக அவசரம் எனும் படமும் பெண்களின் வலி நிறைந்த வாழ்வின் ஒரு பகுதியைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. நாயகி பிரியங்கா காவலதிகாரியாக நடித்துள்ள இப்படம் வெளிவரும் முன்பே பிரபலங்களின் பிரிவியூ சோக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் வெள்ளியன்று இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை லிப்ரா புரொடக்சன் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. லிப்ரா புரொடக்சன் தொடர்ந்து வெற்றிப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது