நடிகர் கார்த்தி ஆரம்பம் முதலே நல்லநல்ல கதைகளில் நடித்து வருகிறார். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் அவரது மாஸ்டர் பீஸ்கள். பின் அலெக்ஸாண்டர், தேவ் என இடையிடையே லேசாக சறுக்கினாலும் கொம்பன், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் மூலம் கமர்சியலாகவும் தன்னை தக்க வைத்துக்கொண்டார். இப்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. ட்ரீம் வாரியர் பிலிம்ஸ் சார்பாக எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கார்த்தி பேசியதாவது, “சில கதைகளை கேட்கும் போதே பிடிக்கும். கைதி கதையும் ஒன்லைன் சொன்னதுமே பிடித்து விட்டது. மெட்ராஸ் படமும் அப்படித்தான். அந்தப்படத்தில் என் கேரக்டர் பிடிக்காவிட்டாலும் கதை பிடித்திருந்தது” என்றார். மேலும் இக்கைதி படத்தில் நரேன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படியான திரில்லர் ஜானர் படங்களில் நடிப்பதில் அவர் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது