சமீபத்தில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்த படம் கோமாளி. வேல் இண்டர்நேஷனல் கம்பெனி தயாரிப்பில் ஹிட் அடித்த இரண்டாவது படம் அது. திரையரங்குகளில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றது. விழாவில் கமர்சியல் படங்களின் பிதாமகன் எனப்படும் கே எஸ் ரவிக்குமார் கலந்து கொண்டார். விழாவில் பேசியது….

“இந்தப்படத்தை வெற்றி படமாக்கியதில் முக்கிய பங்கு பத்திரிக்கையாளர்களுக்கு உண்டு. நான் சமீபத்தில் வெளி மாநில படங்கள்
இயக்கிக்கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் விளம்பர படம் ஒன்று
செய்தேன் அதைத் தொடர்ந்து
நடிப்பு வாய்புகள் வந்தது. எல்லாமே புது முக இயக்குநர்கள் தான். அவர்கள் புதிது புதிதான
ஐடியாக்காளோடு வருகிறார்கள்.
அவர்களுடன் வேலை செய்வது நன்றாக இருக்கிறது.
ரவி இன்னும் புதிய இளைஞன்
போல உழைத்துக்கொண்டே இருக்கிறார். ஈகோ இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறார் அவர் இன்னும் உயரங்கள் அடைய வேண்டும். இந்த வெற்றிப்படத்தில் என்னை பங்குபெறச் செய்ததற்கு நன்றி.” என்றார்