ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வெற்றிப் படமான பாட்ஷா படம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்தம் புதிதாக வெளியாகவிருக்கிறது.
அண்மையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சத்யம் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக போட்டுக் காண்பித்தார்கள். படம் பார்த்த அத்தனைப் பேரும், ஏதோ புதிய ரஜினி படம் ஒன்றைப் பார்த்த திருப்தியில் ஆடித் தீர்த்தார்கள்

இப்போது படத்தை உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் லண்டனில் வரும் பிப்ரவரி 17-ம் தேதி சிறப்புக் காட்சி ஒன்றைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். அந்தக் காட்சி முடிந்ததும் வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் பாட்ஷா மறு வெளியீடு செய்யப்படுகிறது.