சூரியன் சரத்குமார் நடித்த படம். காப்பான் சூர்யா நடித்த படம். ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டால்..இருக்கு என்கிறது சினிமா வட்டாரம். அதாவது 1992-ல் வெளியாகி சக்கைப்போடு போட்டபடம் சூரியன். அப்படத்தில் சரத்குமாரின் தோற்றம் போலவே காப்பான் படத்தில் சூர்யாவின் தோற்றமும் இருக்கிறது என்பதை காப்பான் போஸ்டரைப் பார்த்தாலே தெரிகிறது. கதையும் அப்படத்தின் சாயல் தான் என்கிறார்கள் சிலர். மேலும் காப்பான் கதை கசிந்ததில் ஒரு விசயத்தை கணிக்க முடிகிறது. மோகன்லால் பிரமதர் என்பதும் அவரது மகன் ஆர்யா என்பதும்,  வில்லன்கள் பிரதமரை சுவாகா பண்ணிவிட, அதைச் சூர்யா எப்படி கண்டுபிடித்து பெண்டு கழட்டினார் என்பது தான் படத்தின் தீமாம். கேட்கவே நல்லாருக்கே என்றால் படம் பார்க்கவும் நல்லாத்தான் இருக்கும் என்கிறது படக்குழு. ஆக மொத்தம் காப்பான் சூரியன் வரைக்கும் பயணித்திருக்கிறது