ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா நடித்துள்ள மகாமுனி படத்தை சாந்தகுமார் இயக்கியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விழாவில்
நடிகர் ஆர்யா பேசியதாவது,

“மகா முனி ட்ரைலர் ஸ்னீக்பீக் ஆகியவற்றுக்கு பெரிதாக வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. சாந்தகுமார் சார்ட ஏன் சார் அடுத்த வருசத்துக்கு எட்டு வருசம் எடுத்துக்கிட்டீங்கன்னு கேட்டேன். அதற்கு அவர், ” ஞானவேல்ராஜா சார்ட அட்வான்ஸ் வாங்குனதும் இந்தியாவை முழுதும் பைக்ல சுத்திப்பார்க்க கிளம்பிட்டேன் என்றார். அடுத்த சைக்கிள் வாங்கணும்னு சொல்லி இருக்கிறார். பைக்லே இவ்வளவு காலம்னா அப்போ சைக்கிள்னா என்னாவுறது? எனக்குத் தெரிஞ்சி அவருக்கான நேரத்தை அவர் எடுத்துக்கிட்டார் என்று சொல்லுவேன். என்னிடம் சாந்தகுமார் சார் கதை சொல்ல வந்தார். முதல் சந்திப்பில் கதைப்பற்றி பேசவில்லை. அடுத்த சந்திப்பில் மகாமுனியில் உள்ள மகா கேரக்டரை மட்டும் தான் சொன்னார். நான் இன்னொரு கேரக்டரான முனி கேரக்டர் பத்தியும் கேட்டேன். அவர் இல்ல இதுமட்டும் இப்போது போதும். இதை முடிச்சிட்டு அதைச் சொல்றேன் என்றார். என் கேரக்டர் மட்டும் அல்ல, இந்துஜா, உள்பட எல்லோர் கேரக்டர் மேலயும் ரொம்ப கவன எடுத்துப்பார் அவர். ஒவ்வொரு சீன்லயும் மாடுலேசன் முதல்கொண்டு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். இந்தப்படத்தில் நான் நடித்ததை பெரிய ப்ளஸிங்கா பார்க்குறேன். அதற்கு ஞானவேல் சார் சாந்தகுமார் சார் இரண்டு பேருக்கும் நன்றி. இந்துஜா மகிமா இருவரின் கேரக்டர்களும் ரொம்ப டாமினேட்டிங்கா இருக்கும். வழக்கமான ஹீரோயின்களா அவங்க இருக்க மாட்டாங்க. ரோகிணி மேடம் சின்ன கேரக்டராக இருந்தாலும் நன்றாக நடித்துக் கொடுத்தார். கேமராமேன் அருண் இந்தப்படத்தில் அறிமுகம் ஆகி இருக்கார். ஆனா யாரும் அதை நம்பமாட்டார்கள்..அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கு. இந்தப்படத்தில் டயலாக் நிறைய வைக்கவேண்டாம். ஏன்னா பேக்ரவுண்ட் மியூசிக்ல தமனுக்கு வேலை கொடுப்போம் என்றார் இயக்குநர். இதை மாதிரி ஒவ்வொரு டெக்னிஷியன்ஸுக்கும் அவங்களுக்கான ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் டைரக்டர். ஒரு நல்ல படத்தில் நடித்தோம் என்ற திருப்தியை நிறையவே கொடுத்திருக்கு இந்த மகாமுனி” என்றார்