விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பைரவா. ‘அழகிய தமிழ்மகன்’ புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தற்போது மும்முரமாக உள்ளது.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டிரைலர் இணையத்தில் தற்போது 50,62,677 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தாலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.