வட்டக்கானல் – திரை விமர்சனம்
கொடைக்கானலில் உள்ள ஒரு எழில் கொஞ்சும் காட்டுப்பகுதியே வட்டக்கானல்.
இந்த வனப்பகுதி யில் வளரும் ஒரு வகை மேஜிக் மஷ்ரூம் என்று அழைக்கப்படும் போதைக் காளான் தான் இந்த கதையின் மையம்.
ஆர் கே சுரேஷ் அந்தப் போதைக் காளான் செடிகளைப் பயிரிட்டுக் கோடிக் கணக்கான ரூபாய் பணம் பார்க்கிறார்.
அவர் ஆதரவற்ற மூன்று சிறுவர்களை அடியாட்கள் ரேஞ்சுக்கு வளர்த்து தனது தீவிர விசுவாசிகளாக வைத்திருக்கிறார்.
(துருவன் மனோ, கபாலி விஸ்வந்த்,விஜய் டிவி சரத் ஆகியோர்.)
அவர்களும் வளர்ப்பு தந்தையின் மீது உயிராய் இருக்கி றார்கள்.
அப்பா, அப்பா என்று அவர் சொன்னபடி கேட்கிறார்கள். அவர் சொல்கிற ஆட்களை அடித்து நொறுக்குகிறார்கள். அவரது நிழல் வாழ்க்கைக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் தனது கணவனைக் கொன்றுவிட்டு சொத்தை அபகரித்துச் சுருட்டிக் கொண்டதற்காக பல ஆண்டுகளாக ஆர்கே சுரேஷைப் பழிவாங்க சரியான நேரம் பார்த்துக் காத்து இருக்கிறார் வித்யா பிரதீப்.
இன்னொரு பக்கம் மீனாட்சி கோவிந்தராஜன், தனது பரம்பரைச் சொத்துக்களை எஸ்டேட்டில் வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு கொடுத்து விடும் எண்ணத்தில் இருக்கிறார். ஆனால் ஆர்கே சுரேஷ் அந்தச் சொத்தையும் அபகரிக்க நினைக்கிறார்.
அதற்கு தடையாக அவரது வளர்ப்பு மகன்களில் ஒருவரான துருவன் மனோ வருகிறார். அதற்கு காரணம் ஒரு சில சந்திப்புகளில் அவருக்கும் மீனாட்சிக்கும் காதல் பூ பூத்தது தான் .
ஒரு கட்டத்தில் வளர்ப்பு மகன்களை ஆர் கே சுரேஷ் போட்டுத் தள்ளும் முடிவுக்கு வருகிறார் மீனாட்சி கோவிந்தராஜனோ தனது சொத்தை அவரது எஸ்டேட்டில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.அதுவே அவருக்கு முடிவாக அமைந்ததா? பழிவாங்கத் துடிக்கும் வித்யா ப்ரதீப்பின் திட்டம் பலித்ததா? ஆர்கே சுரேஷுக்கும் மகன்களுக்கும் இடையில் விழுந்த விரிசல் என்ன ஆனது? கேள்விகளுக்குப் பதில் தருகிறது படத்தின் கிளைமாக்ஸ்.
நாயகன் துருவன் மனோ ஆரம்பக் காட்சிகளில் வில்ல முகம் காட்டும் போது சற்று பயமுறுத்தவே செய்கிறார். நாயகியின் காதலைப் பெற்ற பிறகு அவர் நடை உடை பாவனை எல்லாவற்றிலும் நாயகனுக்கு உரிய அழகிய மாற்றம். அவரும் அந்த நாயகன் நடிப்பை
திரையில் அழகாக கொண்டு வந்திருக்கிறார்.
நாயகி மீனாட்சி கோவிந்தராஜனின் தோற்றமும் நடிப்பும் பாராட்டும் வகையில் உள்ளது.
ஆர்.கே
சுரேஷ் மிரட்டும் தோற்றத்தில் வந்து முழு வில்லனாக நடிப்பில் ஆளுமை செய்கிறார். வளர்ப்பு மகன்கள் மீது சந்தேகம் கொள்ளும் இடங்களில் தீப்பொறி நடிப்பு.
பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா ப்ரதீப் ஆகியோரும் ஏற்ற பாத்திரங்களில் நிறைவு.
போதைக் காளான் சாகுபடி செய்தபடி
அந்த காட்டையே தன் அதிகார வரம்புக்குள் வைத்திருக்கும் ஆர் கே சுரேஷ் என்கிற எதிர்மறைப் பாத்திரத்தை மையப்படுத்தி இந்தக் கதை உருவாகி இருக்கிறது. அவரும் அதை உணர்ந்து தனது வில்லன் நடிப்பால் அந்த கேரக்டருக்கு நடிப்பால் முழுமை சேர்க்கிறார்.ஆனால் போதைக் காளான் பற்றிய விளைவுகளைப் படத்தில் இன்னும் கூட தெளிவாக சொல்லி இருக்கலாம்.
ஒரு ரவுடியின் அட்டகாசம் தொடங்கி அவனது வீழ்ச்சி வரை இந்த கதையில் கட்சிகள் அமைத்து கடைசி வரை கடைசி வரை பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர்
