உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது.
இப்படத்தை அடுத்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
உதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகினார்கள்.
தற்போது இந்த புதிய படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.