அரசியலை ஒரு பக்கம் கவனித்துக்கொண்டே இன்னொரு பக்கம் சினிமா, டிவியிலும் கவனம் செலுத்துகிறார் கமல். இந்த மாதம் துவங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அடுத்து அவர் நடிப்பில் விஸ்வரூபம்-2 வெளியாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே வெளியிட திட்டம் இருக்கிறது. காரணம் பிக்பாசில் வைத்து விளம்பரம் செய்தால் அது மக்களிடையே எளிதில் சேரும். பிக்பாஸ் முடிந்த பிறகு இந்தியன் 2 தொடங்க திட்டமிட்டு இருந்தார்கள்.
ஆனால் சபாஷ் நாயுடுவை முடித்துக் கொடுத்தால் தான் அடுத்த படத்தை தொடங்க விடுவோம் என்று தயாரிப்பு தரப்பில் அழுத்தம் தரப்பட்டதாம். எனவே மீதம் இருக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு இந்தியன் 2-ஐ தொடங்கவிருக்கிறார். ஆகஸ்டில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் அவரது மகள் ஸ்ருதியும் நடிக்கிறார்.