திரை விமர்சனம்

லெவன் – திரை விமர்சனம்

சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதுவும் ஒரே சாயலில். இறந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடலை எரித்து அதை பொது வெளியில் போடும் முறையை கையாளும் சைக்கோ ஒவ்வொரு முறையும் எந்த தடயமும் இல்லாமல் தப்பி விடுகிறான். இதனால் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார்.
இதற்கிடையே கொலைகளும் தொடர்கிறது.

இந்நிலையில் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதன் பிறகு வழக்கு காவல்துறை அதிகாரி நவீன் சந்திராவிடம்
போகிறது.
ஆனால் அவர் பொறுப்பேற்ற பிறகும் கொலைகள் தொடரவே செய்கிறது. காவல்துறை மீது மண்ணை தூவி விட்டு கொலைகளை தொடரும் அந்த கொலையாளி பிடி பட்டானா? தொடர் கொலைக்கான அவன் மோட்டிவ் என்ன என்பது கொஞ்சமும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ்.

இருக்கட்டும். இந்த படத்துக்கும் லெமன் என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் திரைக் கதையின் மர்ம முடிச்சு. அதை கடைசி வரை சஸ்பென்ஸ் குறையாமல் எழுதப்பட்டிருக்கிற திரைக்கதைக்கு முதல் ஹாட்ஸ் ஆப்.
லெவன் என்ற தலைப்புக்கும் கதைக்கும் இருக்கும் தொடர்பு நிச்சயம் எதிர்பாராத சஸ்பென்ஸ்.

நாயகனாக நவீன் சந்திரா, அந்த உயர் போலீஸ் அதிகாரிக்கே உரிய கம்பீரத்துடன் படம் முழுக்க வலம் வருகிறார் . தன்னை விரும்பும் நாயகியிடம் காக்கி சட்டைக்கே உரிய கம்பீரத்துடன் அட்வைஸ் செய்யும் இடம் சூப்பர்ப்.சண்டைக்காட்சிகளில் அதகளம் செய்கிறார்.பள்ளியின் தலைமை ஆசிரியையாக அபிராமி அந்த கேரக்டரில் பிரகாசிக்கிறார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன் தங்கள் பாத்திரத் தேர்வில் பளபளக்கிறார்கள்.

முதல் முறையாக கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்திற்கு இசையமைத்திருக்கும் டி.இமான், அதிலும் தனது முத்திரையை ஆழமாக பதித்திருக்கிறார்.ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் அத்தனை அழகு.எழுதி இயக்கியிருக்கும் லோகேஷ் அஜில்ஸ், sகொலை செய்யப்படும் நபர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள் ? என்ற கேள்விகளை அடுக்கடுக்காக அடுக்கி அத்தனைக்கும் தெளிவான பதில் சொல்லி இருக்கிறார். கொலையாளி யார் என்று அந்த கிளைமாக்ஸ், அதற்கான காரணம் கதையின் மொத்த ஜீவனுக்குமானது.

மொத்தத்தில் இந்த லெவன் சஸ்பென்ஸ் ஜானர்களில் குயின்.