சினிமாவைத் தாண்டி சமூகச் சேவையில் அக்கறை செலுத்திவரும் த்ரிஷா, கழிவறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்.

திரையுலகில் பல படங்களில் பிஸியாக த்ரிஷா நடித்துவந்தாலும் சமூகச் சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் த்ரிஷாவுக்கு, அங்கீகாரம் தரும் வகையில் ‘யுனிசெஃபின் செலிப்ரிடி அட்வகேட்’ என்ற பதவி சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்.

குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு மட்டுமல்லாது சமூக விழிப்புணர்விலும் ஈடுபட்டுவரும் த்ரிஷா, காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி கிராமத்துக்கு வருகை புரிந்தார். அங்குக் கழிவறை கட்டித் தரும் பணியில் தானும் ஈடுபட்டுள்ளார்.