இன்றைய நவீன உலகத்தில் பணம் தான் மனித வாழ்க்கையை தீர்மானிக்கிறது.. மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே ஏழைக்கு பணக்காரனுக்கும் நடக்கும் போராட்டங்கள் எப்போதும் இருக்கிறது.

1) தேஜ் சரண்ராஜ் ரஜின் ரோஸ் இருவரும் நண்பர்கள்.. கொள்ளை அடிப்பது கார் திருடுவது இவர்களின் தொழில்.. ஒரு கட்டத்தில் இவர்களுக்கு போட்டி பொறாமை வந்து விடுகிறது.

2) வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்சியர் விக்ரம் ஆதித்யா.. வட்டி வரவில்லை என்றால் போலீஸ் என்றால் கூட மிரட்டும் கெத்தான ஆசாமி.

3) காதல் என்ற பெயரில் ஆண்களை வீழ்த்தி அவர்களிடம் இருந்து பணம் பறிப்பது நாயகி அனன்யா தொழில்.

4) தன்னிடம் வரும் எந்த ஒரு வழக்கு என்றாலும் அதில் காசு பார்ப்பது இன்ஸ்பெக்டர் நீதிமணியின் வேலை. மேலும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வைத்திருக்கும் உண்டியலில் கூட காணிக்கை கேட்கும் சுபாவம் இவருக்கு..

5) கால் டாக்ஸி ஓட்டுபவர் சுவாதி மீனாட்சி. இவருக்கு ஒரு கட்டத்தில் வேலை போய் விடுகிறது. அந்த சமயம் பார்த்து தந்தை விபத்தில் சிக்கிக் கொள்கிறார் அவரைக் காப்பாற்ற பத்து லட்சம் பணம் தேவைப்படுகிறது..

5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ஹைப்பர்லிங்க் கதையாக தொகுத்து வல்லவன் வகுத்ததடா என்ற படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இந்தக் கதைகளை ஒன்றாக இணைத்து இறுதியில் என்ன நடந்தது.? என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்‌ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Tej Charanraj (as) Chiranjeevi
Rajesh Balachandiran (as) Neethimani
Aananya Mani (as) Agalya
Swathi Meenakshi (as) Subhatra Vikram Adhitya (as) Kuberan
Regin Rose (as) Chakkaravarthi

இவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட புது முகங்கள் தான்.. ஆனால் அனைவரும் நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி காணப்படுகிறது.

ஆண்களின் சபல புத்தியை வைத்து அனன்யா ஆடும் ஆட்டம் வேற லெவல்..

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரனின் ஹேர் ஸ்டைல் மற்றும் அவரது நக்கலான சிரிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.. அவரது கேரக்டரும் ஒரு கொடுமைக்கார போலீஸ் புத்தியை காட்டுகிறது.

பெரும்பாலும் படத்தில் நெகட்டிவ் கேரக்டர்கள் காணப்பட்டாலும் கால் டாக்ஸி டிரைவர் சுவாதியின் கேரக்டர் பாசிட்டிவாகவே காட்டப்படுகிறது.. அவரும் தன் கேரக்டரை உணர்ந்து அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நேர்மைக்கு கிடைத்து வெற்றி பாராட்டும் வகையில் இருந்தாலும் இதெல்லாம் இந்த காலத்தில் நடக்குமா என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி.?

பைனான்சியர் விக்ரமாதித்யா கொடூரமான கேரக்டர்தான்.. ஆனால் பணத்தேவைக்காக வரும் நபர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி தர முடியவில்லை என்பதெல்லாம் ஓவர்.. இவரைப்போல ஒரு கடுமையான பைனான்சியர் தேவை தான் போல..

தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ்.. இருவரும் கார் திருடுவது சுற்றுவது எனத் இருந்தாலும் திடீரென நண்பனை போட்டுத்தள்ள மனம் மாறுவது என்பது கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகும்..

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். அஜய் படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

சகிஷ்னா பின்னணி இசை பாராட்டும்படி  உள்ளது.. ஒரு திரில்லர் படத்திற்கான இசையை கொடுத்திருப்பது சிறப்பு.. ஒளிப்பதிவில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. கேமரா குவாலிட்டி லோ பட்ஜெட் படத்தை காட்டுகிறது.

போக்கஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘வல்லவன் வகுத்ததடா’.

ஹைப்பர் லிங்க் பாணியிலான கதையை தயாரித்து இயக்கி இருக்கிறார் விநாயகர் துணை பணம் மனுஷனை எந்த அளவிற்கு பாடாய் படுத்துகிறது என்பதை காட்டி நேர்மையாக இருந்தால் உங்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும் என்பது காட்சிப்படுத்தி அதற்கு கடவுள் துணை புரிவார் என்பதைப் போல காட்சிப்படுத்தி இருக்கிறார்..

ஆனால் நேர்மைக்கான காலம் இருக்கிறதா என்ன??

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/04/sddefault-2.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/04/sddefault-2-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்இன்றைய நவீன உலகத்தில் பணம் தான் மனித வாழ்க்கையை தீர்மானிக்கிறது.. மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே ஏழைக்கு பணக்காரனுக்கும் நடக்கும் போராட்டங்கள் எப்போதும் இருக்கிறது. 1) தேஜ் சரண்ராஜ் ரஜின் ரோஸ் இருவரும் நண்பர்கள்.. கொள்ளை அடிப்பது கார் திருடுவது இவர்களின் தொழில்.. ஒரு கட்டத்தில் இவர்களுக்கு போட்டி பொறாமை வந்து விடுகிறது. 2) வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்சியர் விக்ரம் ஆதித்யா.. வட்டி வரவில்லை என்றால் போலீஸ் என்றால் கூட...