விஜய் ஆண்டனி, மிருணாளினி, ஷாரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திருமணம் செய்து கொண்டால் காதல் திருமணம் தான் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார் விஜய் ஆண்டனி.. மலேசியாவில் வேலை செய்து வருவதால் திருமண வயதையும் கடந்து விடுகிறார்.

35 வயது ஆனாலும் முரட்டு சிங்கிளாய் வாழ்கிறார். காதலுக்காக ஏங்கித் தவிக்கிறார்.. இந்த சூழ்நிலையில் தென்காசிக்கு தன்னுடைய தாத்தா மரணத்திற்காக வரும் விஜய் ஆண்டனி அங்கு நாயகி மிருணாளினியை சந்திக்கிறார்.

பார்த்தவுடன் காதல் வருகிறது. அவரை திருமணம் செய்யவும் முயற்சி எடுக்கிறார்.

ஆனால் மிருணாளினிக்கு திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.. அவரின் கனவு மிகப்பெரியது.. ஒரு மிகப்பெரிய நடிகையாக வர வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

அடுத்த நாளே திருமண பந்தத்தில் இருந்து விலக நினைக்கிறார் மிருணாளினி.. விவகார்த்து கேட்கிறார்.. ஏன்? என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

பல படங்களில் ஆக்சன் சீரியஸ் ரோல் என வலம் வந்த விஜய் ஆண்டனி இதில் ரொமான்டிக் ஹீரோவாக உருவெடுத்து இருக்கிறார்.. காதலுக்காக காதலியிடமும் அதே காதலுக்காக மனைவியிடமும் அவர் ஏங்கும் காட்சிகளில் ஒரு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்..

‘எனிமி’ உள்ளிட்ட பல படங்களில் பார்த்த மிருணாளினி இந்த படத்தில் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் காதலுக்கு உதவுபவராக யோகி பாபு, சில இடங்களில் சிரிக்க வைத்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.. இவர்களுடன் விடிவி கணேஷ், இளவரசு, ஷாரா ஆகியோர் கதையின் திரை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..

இயக்குனர் – விநாயக் வைத்தியநாதன்.

இசை – பரத் தனசேகர்

ஒளிப்பதிவு – பருக் ஜே பாஷா

பரத் தனசேகர் இசையில் பாடல்கள் செவிக்கும் மனதிற்கும் இதமாக அமைந்திருக்கிறது. பின்னனி இசையும் சிறப்பு.. ஒளிப்பதிவாளர் பாஷா தன் பணியை பக்காவாக செய்திருக்கிறார்.

காதலுக்காக ஏங்கும் கணவன். லட்சிய கனவுக்காக ஏங்கும் மனைவி இவர்களிடையே உருவாகும் பந்தம் இதுதான் படத்தின் மூலக்கதை.

மனைவியின் கனவு நினைவாக கணவன் உதவினாரா? என்பதை அழகாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன்.

திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு.. இன்னும் காட்சிகளை உணர்வுப்பூர்வமாக கொடுத்திருந்தால் இந்த ரோமியோ களத்தில் கலக்கியிருப்பார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-11-at-22.23.24-1-1024x683.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-11-at-22.23.24-1-150x150.jpegrcinemaதிரை விமர்சனம்விஜய் ஆண்டனி, மிருணாளினி, ஷாரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருமணம் செய்து கொண்டால் காதல் திருமணம் தான் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார் விஜய் ஆண்டனி.. மலேசியாவில் வேலை செய்து வருவதால் திருமண வயதையும் கடந்து விடுகிறார். 35 வயது ஆனாலும் முரட்டு சிங்கிளாய் வாழ்கிறார். காதலுக்காக ஏங்கித் தவிக்கிறார்.. இந்த சூழ்நிலையில் தென்காசிக்கு தன்னுடைய தாத்தா மரணத்திற்காக வரும் விஜய் ஆண்டனி அங்கு நாயகி...