சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. அம்ரீஸ் இசை அமைத்துள்ள இந்த படம் 22-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

“ஒரு படம் ரிலீஸ் ஆனவுடன் எனக்காக நன்றாக ஓட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். இந்த படம் தயாரிப்பாளர் முருகனுக்காக சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

இயக்குனர் சித்திக் சாரின் முதல் படம் வெளியான போது நான் பிறக்கவில்லை. அவருடைய படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த கவுரவம். இதில் என்னுடன் நடித்துள்ள அரவிந்த் சார் தான் சினிமா துறையில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்.

அரவிந்த் சாமி ஒரு அருமையான மனிதர். அவர் இந்த வயதிலும் அழகாக பிரைட்டாக இருக்கிறார் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அதற்கு காரணம் அவருடைய நல்ல மனது தான். அழகான உள்ளம் கொண்ட மனிதர்” என்றார்.