துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசளித்த நடிகர் ஆனந்தராஜ்

1990-களில் தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக திகழ்ந்தவர் நடிகர் ஆனந்தராஜ்.
ரஜினிகாந்த் விஜயகாந்த் சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகராகவே மாறிவிட்டார். கொஞ்சம் வில்லத்தனம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு புத்தாடை மற்றும் தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ந்தார்.
