Latest:
திரை விமர்சனம்

வயது தடையில்லை.; கபில் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்… 3.5/5

ஐடியில் வேலை பார்க்கிறார் அசோக் (ஸ்ரீனி செளந்தரராஜன்). இவரது மனைவி நிமிஷா இவர்களுக்கு 14 வயதில் ஜான் என்றொரு மகன் இருக்கிறார்.

ஸ்ரீனிக்கு கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினால் கூட அடித்து துரத்து சுபாவம் கொண்டவர். மிகவும் நேர்மையானவர். பயந்த சுபாவம் கொண்டவர். கார் பைக் ஓட்ட கூட தயங்குபவர்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் காய்கறி இருக்கும் நாகராஜ் நீங்கள் கபில்தானே.. உங்களை எனக்குத் தெரியும் என்கிறார். இதனால் மனைவி கன்ஃபியூஷன் ஆகிறார். இந்த சூழ்நிலையில் மகனுக்கு விபத்து ஏற்பட்ட போது திடீரென காரை ஓட்டி செல்கிறார் ஸ்ரீனி. இதனால் மேலும் குழப்பமடையும் நிமிஷம் காய்கறி விற்க்கும் நாகராஜிடம் விசாரிக்கிறார். அவருக்கு அதிர்ச்சியான விஷயங்கள் தெரிய வருகிறது.

ஸ்ரீனி வாழ்க்கையில் நடந்தது என்ன? இனி நடக்கப் போவது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

ஸ்ரீனி சௌந்தரராஜன் தான் இந்த படத்தை இயக்கி தயாரித்து நடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் தன்னால் முடிந்தவரை முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். சில இடங்களில் நாடகத் தன்மை வந்து சென்றாலும் 40 வயது நாயகனை திரையில் காட்ட முயற்சித்துள்ளார். இவரது மனைவியாக நிமிஷா. நம் அன்றாடம் பார்க்கும் யதார்த்த இல்லத்தரசியாக காண முடிகிறது. காய்கறி விற்கும் நண்பன் நாகராஜ் சின்ன வேடம்தான் என்றாலும் கவனிக்க வைக்கிறார்.

சிறு வயது ஸ்ரீனி செளந்தரராஜன் வேடத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பரத் மற்றும் ஸ்ரீனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஜான் இருவரும் இருவரும் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்

இவர்களை சுற்றி தான் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர்.

இவர்களுடன் வையாபுரி சரவணன் உள்ளிட்டோரும் உண்டு.. சில காட்சிகள் என்றாலும் கூடுமானவரை அவர்கள் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளனர்.

ஸ்ரீனி சௌந்தரராஜன் புதுமுகம் என்றாலும் எடிட்டர் கேமரா மேன் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர்கள் என அனைத்திலும் சிறந்த கலைஞர்களை பயன்படுத்தி இருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவாளர் ஷியாம் ராஜ் நல்ல லொகேஷனை தேர்வு செய்து இருக்கிறார். ஆனால் இதில் கிரிக்கெட்டு தான் பிரதானம் என்பதால் கூடுமானவரை கிரீன் மேட் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அப்பட்டமாக கிராபிக்ஸ் காட்சிகள் காட்டிக் கொடுக்கின்றன.

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையில், சினேகன், பா.விஜய், அருண்பாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படத்தில் மொத்தம் 8-10 பாடலா ? என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் அனைத்துமே ஒரே போல டியூனில் காணப்படுவது வருத்தம்.

பாட்ட நிறுத்துங்க ஆபரேட்டர் என்று சொல்ல தோன்றுகிறது.

எந்தத் துறையாக இருந்தாலும் வயது தடை இல்லை அது ஒரு நம்பர் என்பதை ஸ்ரீனி சௌந்தரராஜன் சிக்ஸர் அடித்து சொல்லியிருக்கிறார். நம் இளவயது கனவு நினைவாகவில்லை என்றாலும் அதை நம்மால் எந்த வயதிலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என சொல்லி இருப்பது ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும்.