Latest:
சினிமா செய்திகள்

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே வாரத்தில் அதிக வசூலை அள்ளிய ‘லியோ’

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘லியோ’.

இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகள் வேண்டும் என ரசிகர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் லியோ படத்திற்கு கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் தொடங்கப்பட்டது.

படத்திற்கு ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் 5 நாட்கள் விடுமுறை தினம் ஆன நிலையில் உலகம் முழுவதும் வசூல் வேட்டை ஆடி வருகிறது ‘லியோ’.

தற்போது படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிகமான வசூலித்த படங்களில் லியோ முதலிடத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.