Latest:
திரை விமர்சனம்

ரத்தம் விமர்சனம்

Infiniti Film Ventures நிறுவனம் தயாரித்த ‘ரத்தம்’ படத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார்.

வட இந்தியாவில் ஒரு பகுதியில் தன் மனைவியை இழந்த நிலையில் தன் மகளுடன் வசித்து வருகிறார் விஜய் ஆண்டனி. ஒரு கட்டத்தில் இவரை சந்திக்கும் நிழல்கள் ரவி உன் நண்பனும் என் மகனுமாகிய செழியன் மர்ப நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

எனவே நீ மீண்டும் நம் ஆபீசுக்கு வந்து இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசத்தை தொடர வேண்டும் என அழைக்கிறார். எனவே சென்னை திரும்பும் விஜய் ஆண்டனி வானம் என்ற பத்திரிக்கையில் மீண்டும் இணைகிறார்.

அந்த சமயத்தில் தொடர் கொலைகள் நடக்கிறது. எந்த தடையும் இல்லாமல் கொலைகள் செய்யப்பட்டாலும் இந்த கொலைகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்.

மத வெறுப்பு ஜாதி வெறுப்பு நடிகர் வெறுப்பு உள்ளிட்டவைகளை மையப்படுத்தி இந்த கொலைகள் நடப்பதை அறிகிறார்.

அதன் பிறகு என்ன ஆனது? இவர்களை தூண்டி விடுபவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

எப்பொழுதும் சரக்கு அடித்துக் கொண்டே முகமுழுக்க தாடியுடன் விரத்தியுடன் காணப்படுகிறார் விஜய் ஆண்டனி. வழக்கம்போல அவரது பாணியில் நிதானமாக வசனங்கள் பேசி ரசிக்க வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆக்ஷனிலும் அடித்து தூள் கிளப்புகிறார். க்ளைமாக்ஸ் காட்சி குதிரை பாய்ச்சல் ரசிக்க வைக்கிறது.

வழக்கமான நாயகி போல வரும் மகிமா திடீரென தன் நடிப்பில் மிரளச் செய்கிறார். இவரது கேரக்டர் என்னவென்று சொன்னால் சுவாரசியம் குறைந்து விடும்.

ஒரு காட்சியில் விஜய் ஆண்டனியின் உளவு பார்க்க வந்ததை கண்டுபிடிக்கும் மஹிமா நம்பியார் அவரிடம் சிரித்துக் கொண்டே மிரட்டல் விடும் காட்சி செம.

இடைவேளை காட்சியும் கிளைமாக்ஸ் காட்சி கடிதமும் எதிர்பாராத ட்விஸ்ட்.

க்ரைம் ரிப்போர்ட்டாக நந்திதா நடித்துள்ளார். இதுவரை அவர் ஏற்காத வேடம். நம் ஆபிஸில் இப்படி ஒரு ஃபிகர் இருக்க மாட்டாரா? என ரிப்போர்ட்டர்களை ஏங்கும் அளவிற்கு கிளாமராக இருக்கிறார்.

செழியனின் காதலியாக ரம்யா நம்பீசன். இவரது கேரக்டரும் எதிர்பாராத திருப்பம். பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக பதட்டத்துடன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கான பின்னணி காரணமும் பெண்கள் வாழும் சூழ்நிலையை கற்பிக்கிறது.

தமிழ் படம் 1.. தமிழ் படம் 2 என ஸ்கூஃப் படங்களை எடுத்த சி எஸ் அமுதன் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தை கொடுத்திருக்கிறார். இதுவரை எத்தனையோ மீடியா தொடர்பான சினிமாக்கள் வந்திருந்தாலும் இன்வெஸ்டிகேஷன் ஜெனலிசம் என்பதை மிக நுட்பமாக சொல்லி இருக்கிறார் அமுதன்.

கண்ணன் நாராயணன் இசையில் பின்னணி இசை மிரட்டல். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

நாம் தினம் தினம் செய்திகளில் பார்க்கும் படிக்கும் விபத்துக்கள் கொலைகள் சாதாரணமாக நடப்பவை அல்ல. அவை எல்லாம் ஏதோ ஒரு தூண்டுதல் பேரில் நடக்கிறது என்பதை ஆழமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மத வெறுப்பு.. ஜாதி வெறுப்பு இவற்றை வைத்து சோசியல் மீடியாக்களில் எழும் வன்முறையை சித்தரித்துள்ளார். இயக்குனர் அமுதனிடம் இருந்து இப்படி ஒரு அற்புதமான திரைக்கதையை நாம் எதிர்பார்க்கவில்லை என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிக்க முடிகிறது.

தயாரிப்பாளர் : கமல் போரா, தனஞ்செயன், பங்கஜ் போரா.

ஆக மொத்தம் ரத்தம்… பத்திரிக்கை யுத்தம்