Latest:
திரை விமர்சனம்

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்..


மதுரியா புரொடக்ஷன்ஸ் மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில் ‘இந்த கிரைம் தப்பில்ல’.

தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை அலசல்…

செல்போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார் நாயகி மேக்னா. இவரது அழகில் மயங்கி 3 ஆண்கள் இவளை காதலிக்கின்றனர்.

இவர்கள் மூவரும் நண்பர்கள் என்றாலும் தாங்கள் காதலிப்பது ஒரே பெண்ணை தான் என்பது தெரியாது. காரணம் மூன்று பேரிடமும் மூன்று பெயர்களை சொல்லி ஏமாற்றுகிறார்.

ஒரு கட்டத்தில் இந்த மூவரையும் ஓர் இடத்திற்கு வரச் சொல்லி மூன்று நண்பர்களையும் கை கால் கட்டி சில நபர்கள் மூலம்அடிக்க சொல்கிறார்.

மூன்று ஆண்களையும் பொய் சொல்லி காதலிப்பது நோக்கம் என்ன? அவர்களை கட்டி அடிக்க என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்பு…

பெண்களை கற்பழிக்கும் நபர்களை பழிவாங்க போராடும் ஒரு கூட்டத்தை பற்றி சொல்ல இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் தேவகுமார். அவர் எடுத்துக்கொண்ட கதையின் கரு வலுவானதாக இருந்தாலும் எந்த காட்சியும் சுவாரசியம் இல்லை.்அனைத்தும் நாடகத்தன்மை.

நாயகி மேக்னாவை காதலிக்க வரும் 3 ஆண்களுமே எந்த இடத்திலும் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை.

அழகு மேனகையாக மேக்னா தோன்றியிருக்கிறார். இவர் தான் இந்த படத்தின் ஒட்டுமொத்த கதையை தாங்கி நிற்கிறார். ஆனால் எதிலும் யதார்த்தம் இல்லை என்பது வருத்தம்.

ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை கைய பிடித்து இழுத்தாலே அனைவரும் கூடி விடுவார்கள் அந்த இடத்தில் கூட யாருமே இல்லையா? திடீர்னு திடீரென வந்து போகும் காட்சிகளும் எடிட்டிங் பணியின் மோசமான நிலையை காட்டுகிறது.

அதுபோல திடீர் திடீர் என வரும் பாடல்களும் நம்மை மிகவும் சோதிக்கிறது.

நல்ல கருத்தை சொல்ல வந்த படக்குழுவினர் இந்த படத்தை ஒரு முறை போட்டு பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கற்பழிப்புக்கு எதிரான போராட்டமும் அதற்காக போராடும் நபர்களை வைத்து இந்த க்ரைம் தப்பில்லை என்கிறார் இயக்குனர்.

ஆனால் திரைக்கதை அமைத்த விதத்திலும் நடிகர்களை தேர்ந்தெடுத்த விதத்திலும் அவர் தடுமாறி இருக்கிறார்.

ஆக இந்த க்ரைம் தப்பு இல்லை.. கதையில் உப்பில்லை