ஆதிக் ரவிச்சந்திரனை திட்டினவங்களே இன்னைக்கு பாராட்டுறாங்க… – விஷால்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் நன்றி கூற பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.
இதில் பங்கேற்ற நடிகர் விஷால் பேசியதாவது…
“நான் எப்பவும் விஜய் ஆண்டனியை ‘ராஜா’ என்றுதான் கூப்பிடுவேன். ஹைதராபாத்தில் இருக்கும்போது நானும், எஸ். ஜே சூர்யா சார், ஆதிக் ரவிசந்திரன் எல்லோரும் விஜய் ஆண்டனிக்கு நடந்த பேரிழப்புக் குறித்து பேசிய போது ‘நமக்கே மனசு இந்தளவிற்கு கனமாக இருக்கும்போது, அவரும் (விஜய் ஆண்டனி) குடும்பமும் எப்படி இதை எதிர் கொள்ளப் போகிறார்கள்’ என வருத்தப்பட்டோம்.
விஜய் ஆண்டனிக்கு மட்டும் அல்ல அவர்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் கடவுள் இதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தியைக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் விஜய் ஆண்டனிக்கு பக்க பலமாக நான் இருப்பேன்” என்றார்.
ஆதிக் இனிமேல் கடிதம் எழுத வேண்டாம். உன் மேல் உள்ள நம்பிக்கையில் அடுத்த படங்கள் பண்ணுவதற்கும் தேதி கொடுப்பேன்.
ஆதிக் உடன் படம் பண்ணுறேன்னு சொன்னப்போ, நிறைய பேர் `அவர் கூட ஏன் படம் பண்றீங்கன்னு’தான் கேட்டாங்க. எனக்கு கன்டன்ட் பிடிச்சிருக்கு.. கரெக்டா பண்ணிடுவார்னு சொன்னேன்.
அந்த சமயத்தில் என்னிடம் அப்படி கேட்டவர்கள் இப்போ கால் பண்ணி ‘படம் நன்றாக இருக்கிறது. ஆதிக் ரவிசந்திரன் நன்றாக இயக்கியிருக்கிறார்’ என்றார்கள்.
எஸ்.ஜே சூர்யா மூன்று பக்கத்துக்கு டயலாக் உங்களுக்கு இந்த சீன்ல டயலாக் இல்ல என்று தயங்கி சொல்வான் ஆதிக்.
அது பிரச்னை கிடையாது. நான்தான் கைதட்டல் வாங்கணும் என்கிற அவசியம் கிடையாது. எல்லோரும் கைதட்டல் வாங்கணும்” என்று தெரிவித்தார்.
மேலும் நடிகர் விஜய் குறித்து பேசிய விஷால்.. இப்படத்திற்கான தொடக்கமே எனக்கு பிடித்த என்னுடைய பேவரைட் நடிகரான விஜய் சாரிடம் இருந்துதான் ஆரம்பித்தது. இப்படத்திற்கான டீசரை அவர்தான் வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது…
எனது படங்கள் சரியாக போகாத நேரத்தில் அஜித் சார் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தேன்.. அப்போது அஜித் சார் எனக்கு நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். அதன் பிறகு தான் ‘மார்க் ஆண்டனி’ படத்தை ஆரம்பித்தேன்.. எனவே தற்போது அஜித் சாருக்கு நன்றி. இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்” என பேசினார் ஆதிக்.
