Latest:
சினிமா செய்திகள்திரை விமர்சனம்

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ திரைப்பட விமர்சனம்

ஹிந்து பெண்ணுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் மலர்ந்த காதல் கதை இது.

நடிகை நீலிமா இசையும் ஷார்ட் பிளிக்ஸ் என்ற ஓடிடி தளமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’. இந்த படம் நாளை செப்டம்பர் 28ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஷகீரா (நிரஞ்சனாவுக்கு) திருமண ஏற்பாடுகளை அவரது வாப்பா உமர் செய்து வருகிறார். திருமண நாளுக்கு சில தினங்களே உள்ள நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லை என்கிறார்.

இவரை மணக்க காத்திருக்கும் ஆணிடம் விருப்பமில்லாத காரணத்தை சொல்கிறார். தான் தனது தோழி வினோதா (ஸ்ருதியுடன்) காதல் கொண்டேன். அவளை தான் மணப்பேன். எங்களுக்குள் லெஸ்பியன் உறவு இருக்கிறது” என்கிறார்.

இஸ்லாமிய பெண் – ஹிந்து பெண் காதல் இருவரது வீட்டிலும் தெரிய வரவே எதிர்ப்பு வலுக்கிறது. அதன் பிறகு இரண்டு பெண்களும் என்ன செய்தனர் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

மாடலிங் ஹிந்து பெண்ணாக ஸ்ருதி பெரியசாமியும் இஸ்லாமிய பெண்ணாக நிரஞ்சனா நெய்தியாரும் நடித்துள்ளனர். இருவரது அறிமுகமும் அசத்தல்.

நிரஞ்சனா பாதி வார்த்தைகளை கண்களாலேயே பேசி விடுகிறார்.. இஸ்லாமிய பெண்ணுக்கே உரித்தான வெட்கம் பயம் பதட்டம் ஆகியவற்றை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மாடலிங் சினிமா மீது ஆசை கொண்ட மாடர்ன் பெண்ணாக ஸ்ருதி பெரியசாமி. தன் காதலுக்காக தன் காதலிக்காக வீட்டை எதிர்ப்பதும் இஸ்லாமிய தந்தையிடம் வாக்குவாதம் செய்வதும் என கெத்து காட்டி இருக்கிறார்.

ஷகீராவின் மாப்பிள்ளை, அவளின் தந்தை உள்ளிட்டோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

பாடல்களை ஜி கே பி மற்றும் சிவா சங்கர் எழுதியுள்ளனர். இசை பணியை தர்ஷன் குமார் கவனித்துள்ளார்.

தயாரிப்பாளர் நடிகை நீலிமா இசை.

காதலை மீறி காமம் இந்த கதையில் கலந்துள்ளது. இயக்குனர் நினைத்திருந்தால் அதற்கான காட்சியை அதிகப்படுத்தி இருக்கலாம். ஆனால் எந்த இடத்திலும் ஆபாசமோ விரசமோ இல்லாத காட்சிகளை கொடுத்திருக்கிறார்.

இரண்டு பெண்களும் உதட்டில் முத்தமிட்டும் கொள்ளும் காட்சி மட்டுமே உள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவும் கண்களுக்கு குளிர்ச்சி. ஒரு இஸ்லாமிய பெண் ஹிந்து பெண் அதுவும் லெஸ்பியன் காதல் என்பது நம் சமூகத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாத விஷயம் என்றாலும் அவரது வாழ்க்கையை அவரவர்கள் வாழ தீர்மானிக்கின்றனர்.

அதில் எந்த மதமும் எந்த சாதியும் எவரும் தலையிடக்கூடாது என்பதை சொல்லி இருக்கிறார்.

மேலும் காதலுக்கு பாலின பேதமும் கிடையாது என் இந்த வாழ்வு தொடங்கும் இடம் நீதானே படம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.