மால் திரைப்பட விமர்சனம்

Casting : Gajaraj, Asraf, Dinesh Kumaran, Saikarthi, Gowri Nandha, Vj pappu, Jey
Produced By : Kovai Film Mates – Shivaraj.R and Sai Karthik
Directed By : Dinesh Kumaran
Music By : Pathmayan Sivanandham
தினேஷ் குமரன் இயக்கத்தில், சிவராஜ்.ஆர், கார்த்திக் எம்.பி ஆகியோரது தயாரிப்பில் ஆஹா ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் ‘மால்’.
நான்கு கிளை கதைகளுடன் இந்த படத்தின் சிலை கடத்தல் கதை தொடங்குகிறது.
ராஜராஜ சோழர் சிலை கடத்தல் கும்பல் அறிந்த நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.
ஒரு பக்கம் போலீஸ் கஜராஜ் சிலையை தன் வீட்டுக்குள் மறைத்து வைத்து கோடிக்கணக்கில் விற்க முயல்கிறார்.
அடுத்த கதையில் அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் இருவரும் ஒரு லட்ச ரூபாய் பைக் வாங்க செயின் திருட முயல்கின்றனர். அதுவும் போலீஸ் வீட்டில்..
இன்னொரு கதையில்.. தன் காதலியை ஊருக்கு அனுப்ப மனமில்லாமல் தவிக்கிறார் விஜே பப்பு. அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்து நடக்க கார் ஓட்டிய நபரை மருத்துவமனையில் அனுமதித்து காத்திருக்கின்றனர். அவனிடம் தான் சிலை இருப்பது தெரியாமல் உதவி இருக்கின்றனர்.
இந்த நான்கு கதைகளும் ஒரே இடத்தில் சேர என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ் நேர்மையான போலீஸ் ஆக தன்னை காண்பித்துக் கொண்டு வில்லத்தனம் காட்டி இருப்பது சிறப்பு. இவர் தான் படத்தில் நமக்கு தெரிந்த முகமாக இருக்கிறார்.
சாய் கார்த்திக்கின் மனைவியாக கெளரி நந்தா. புதுமுக நடிகர் என்றாலும் சாய் கார்த்திக் நம்மை நடிப்பில் ஈர்க்கிறார்.
விஜே பப்பு மற்றும் ஜெய் இருவரும் காதலர்களாக நடித்துள்ளனர். காதலில் பெரிய சுவாரசியம் இல்லை.
அஷ்ரப் மற்றும் தினேஷ் குமரன் இருவரும் கொஞ்சம் கலகலப்புடன் கதையை நகர்த்தி செல்கின்றனர். இதில் தினேஷ் படத்தின் இயக்குனர் என்பதால் கொஞ்சம் கூடுதலாகவே ஸ்கோர்ஸ் செய்ய முயற்சி செய்து உள்ளார். திருட செல்லும் போதும் செயினை பறிக்க நினைக்கும் போதும் முகமூடி இல்லாமல் செல்வதெல்லாம் நம்ப முடியாத காட்சிகள்.
பத்மயன் சிவானந்தத்தின் இசையில் பின்னணி இசை சில இடங்களில் சொதப்பல். சில இடங்களில் திரைக்கதை வேகத்திற்கு ஈடு கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவு படத்தொகுப்பு என இரண்டையும் நேர்த்தியாக கொடுத்துள்ளார் சிவராஜ் இவர் தன் பணியை இரவு காட்சிகளில் கூடுதல் சிரத்தை எடுத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது.
காதலர்கள் பிரச்சனை.. சிலை கடத்தல்.. நேர்மையான போலீஸ்..்நேர்மையற்ற போலீஸ்… கடத்தல் கும்பலுக்குள் ஈகோ பிரச்சனை என அனைத்தையும் 12 மணி நேரத்திற்குள் நடக்கும் இரவு கதையாக சித்தரித்து இருக்கிறார் இயக்குனர் தினேஷ்.
சின்ன சின்ன லாஜிக் குறைகள் இருந்தாலும் சின்ன பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்துள்ளார் தினேஷ்.
