Latest:
திரை விமர்சனம்

பாட்னர் பட விமர்சனம்

சொந்த பிசினசில் 15 லட்ச ரூபாய் கடன் வந்து சேர, கடன் பிரச்சினையால் தனது நண்பர் யோகிபாபுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார் நாயகன் ஆதி. அப்போது விஞ்ஞானி பாண்டியராஜனிடம் இருக்கும் ‘சிப்’பை கொள்ளையடித்தால் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது தெரிய வர, அவரிடம் இருக்கும் சிப்பை எடுக்க ஆதியும், யோகிபாபுவும் செல்ல, அங்கே விஞ்ஞானி பாண்டியராஜனால், யோகிபாபு, ஹன்சிகாவாக மாறி விட..

ஹன்சிகாவை மீண்டும் யோகிபாபுவாக மாற்றுவதற்காக பாண்டியராஜனை தேடிப் போக, அவரோ அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட, அப்புறமாய் ஹன்சிகா யோகிபாபுவாக மாறினாரா, இல்லையா என்பதே இந்த கலகல பின்னணியிலான ‘பாட்னர்.’
காமெடி நடிகர்களுடன் இணைந்து பயணிப்பது ஆதிக்கு புதிதல்ல. காமெடியிலும் இயல்பாக ரசிக்க வைக்கிறார்.
கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் யோகிபாபு, டைமிங் காமெடியில் சிரிக்க வைக்கிறார்.
கதையின் நாயகியாக ஹன்சிகா, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய கதாபாத்திரத்தில் மிரட்டி விடுகிறார். அந்த உடல் மொழியும், வசன உச்சரிப்பும் அட்டகாசம். பிற்பகுதி படத்தின் பலமே இவர் தான்.
ஆதிக்கு ஜோடியாக வரும் பாலக் லால்வானி ஒரு பாடல், ஒரு சில காட்சிகள் வந்து போகிறார்.
ஜான் விஜய், ரோபோ சங்கர், தங்கதுரை, பாண்டியராஜன், ரவி மரியா, முனிஷ்காந்த், அகஸ்டியன் கொடுத்த கேரக்டர்களில் நின்று களம் காண்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் மனோஜ் தாமோதரன், ஒரு ஆண் பெண்ணாக மாறினால் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வார்? என்பதை அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் புதிய கதைக்ளத்தில் பயணித்த அனுபவத்தை ரசிர்களுக்கு கொடுத்து விடுகிறார்.