ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவதை மாற்றம் செய்ய அடியெடுத்துக் கொடுக்க வந்திருக்கும் படம்.
ஆணாதிக்க மனப்பான்மைக்கு சவுக்கடி கொடுத்து வெற்றியை ருசித்த மலையாள ‘தி கிரேட் இண்டியன் கிச்சனை தமிழ்ப் படுத்தி இங்கேயும் சூடு குறையாமல் பரிமாறியிருக்கிறார்கள்.
ஆண்கள் வெளியே வேலைக்கு செல்வதும் பெண்கள் வீட்டின் சமையல் அறைக்குள்ளேயே முடங்கி விடுவதுமாகவே பழகி விட்ட ஒரு குடும்பத்துக்கு வாழ்க்கைப் பட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சில நாட்களிலேயே அந்தக் குடும்பத்தில் நிலவி வரும் ஆணாதிக்க மனோபாவம் உறுத்தத் தொடங்குகிறது. சமையல், மையல் இந்த இரண்டும் தானா ஒரு பெண்ணின் வாழ்க்கை என யோசிக்கும் அவர், அப்புறமாய் எடுக்கும் முடிவு தான் பிற்பகுதி கதைக்களம்

.நாயகி ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்த படம் அவரது நடிப்பு வரலாற்றில் ஒரு மாஸ்டர் பீஸ் எனலாம்.
பெண் பார்க்க வந்த இடத்தில் ‘சமையலில் விருப்பம் உண்டா’ என்று நாயகன் ராகுல் ரவீந்திரன் கேட்க, “நான் நல்லாவே சமைப்பேன்” என்று அவர் சொல்லும்போதே அது தனக்காக வைக்கப்பட்ட பொறி என்பதை உணராத முகபாவம் சூப்பர்.
வீட்டில் டைனிங் டேபிளில் குப்பைகளைப் போட்டு விட்டுப் போகும் வழக்கம் உள்ள கணவன், ஹோட்டலில் நாகரீகமாக அதை எடுத்து வைக்கும் இடத்தில், “வெளியேவாவது உங்களுக்கு டேபிள் மேனர்ஸ் தெரிகிறதே’ என்று கேட்கும் இடத்திலும் நாசூக்கான ஊசிக்குத்தலில் தனித்து தெரிகிறார்.
ஆணாதிக்க அத்துமீறலின் உச்சத்தில் “முடிஞ்சா உள்ளே வா… என்ன வந்து தொட்டுப் பார்..!” என்று வெடிக்கும் இடத்தில் நிஜமாகவே சிம்மத்தின் கர்ஜனை.
தன் வீட்டுக்கு வந்த தம்பி குடிக்கத் தண்ணீர் கேட்க, “அதைக்கூட நீ போய் எடுத்துக்க மாட்டியா…’’ என்று அதட்டும் இடம் நிஜமாகவே ஆணாதிக்கத்துக்கு வைக்கப்படும் குட்டு. ஐஸ்..உனக்கு விருது நிச்சயம்மா.
ஐஸ்வர்யாவின் கணவராக வரும் ராகுல் ரவீந்திரன் நடிக்கக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிக்சராக அடித்து விளாசுகிறார். மென்மையாக மனைவியை ஆதிக்கம் புரியும் இடங்களில் அமைதிப் புயல். இவரது அப்பாவாக வரும் போஸ்டர் நந்தகுமார் அதிகம் பேசாமல் கவரும் இன்னொருவர்.
வீட்டுப் பெண்களின் மூலமே ஆணாதிக்கம் வளர்கிறது என்பதை நந்தகுமாரின் மனைவி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா கேரக்டர்கள் வெளிப்படுத்தும் திரைக்கதை அழகு.
சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கலைராணி தன் பங்குக்கு மிரட்டி விட்டுப் போகிறார். ஒரே ஒரு காட்சியில் வரும் யோகிபாபு நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.
பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவும், ஜெர்ரி சில்வஸ்டர் வின்சென்ட்டின் இசையும் படத்தின் பக்க பலம்.
ஒரு பெண் தனது புரட்சியை சமையல் அறையில் இருந்தும் தொடங்க முடியும் என்ற கான்செப்டை முடிவு வரை விறுவிறுப்பு குறையாமல் தந்த இயக்குனர் கண்ணனுக்கு தாராளமாக தரலாம், ஸ்பெஷல் பொக்கே.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/81332bf9-2210-490b-8de9-51ce7f753e7b-713x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/81332bf9-2210-490b-8de9-51ce7f753e7b-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவதை மாற்றம் செய்ய அடியெடுத்துக் கொடுக்க வந்திருக்கும் படம். ஆணாதிக்க மனப்பான்மைக்கு சவுக்கடி கொடுத்து வெற்றியை ருசித்த மலையாள ‘தி கிரேட் இண்டியன் கிச்சனை தமிழ்ப் படுத்தி இங்கேயும் சூடு குறையாமல் பரிமாறியிருக்கிறார்கள். ஆண்கள் வெளியே வேலைக்கு செல்வதும் பெண்கள் வீட்டின் சமையல் அறைக்குள்ளேயே முடங்கி விடுவதுமாகவே பழகி விட்ட ஒரு குடும்பத்துக்கு வாழ்க்கைப் பட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சில...