மருத்துவக் கல்லூரி மாணவியான சோபியா கல்லூரி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட, அவரது நெருங்கிய தோழியான தாராவை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி வரும் தாரா, தன்னை அடியாட்கள் துரத்தி வருவதாக கூறி சத்யாவிடம் அடைக்கலம் கோருகிறார். முதலில் மறுக்கும் சத்யா, பிறகு அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால் மறுநாளே தாரா இறந்து போக, அதிர்ச்சியாகிறார் சத்யா. இதன்பிறகு வரும் சிக்கல்களில் இருந்து சத்யா எப்படி தன்னை மீட்டெடுக்கிறார் என்பது பரபரப்புக்கு பஞ்சமில்லா கதைக்களம்.
சத்யாவாக ஆர்.ஜே.பாலாஜி, ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்த ஆர்.ஜே.பாலாஜி, இந்த படத்தில் அமைதி, அப்பாவி, பதட்டம் கலந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். வெல்டன் பாலாஜி. இதுலயும் ஜெயிச்சிட்டீங்க.
ஒருசில காட்சிகள் என்றாலும், வந்த வரையில் தன் இருப்பை ஆழமாக பதிவு செய்து விடுகிறார், தாராவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காருக்குள் பிணத்தை பார்த்ததும் பதறும் காட்சியில் நடிப்பில் ஒ.கே. வாங்கி விடுகிறார் கபாலி விஸ்வாந்த். போலீஸ்அதிகாரியாக விவேக் பிரசன்னா நிறைவு.
நல்ல மதிப்பெண்களுடன் மெரிட்டில் உயர் கல்வி படிக்க வரும் ஆதரவற்றோரை அங்கிருந்து துரத்தி அவர்கள் சீட்டை பெரும்பணம் படைத்தோருக்கு கோடிகளில் விற்கும் அரசியலை திரில்லாக தர முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்கிய ஜி.என். கிருஷ்ணகுமார்.
படத்திற்கு முதுகெலும்பாக இருப்பது சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை. யுவாவின் ஒளிப்பதிவும் ஜி.மதனின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்தோடு கூடவே ரசிகனையும் இணைத்துக் கொள்கிறது. வில்லன் இவர் தான் என்று தெரிய வரும் அந்த கிளைமாக்ஸ் எதிர்பாராதது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/run-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/run-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்மருத்துவக் கல்லூரி மாணவியான சோபியா கல்லூரி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட, அவரது நெருங்கிய தோழியான தாராவை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி வரும் தாரா, தன்னை அடியாட்கள் துரத்தி வருவதாக கூறி சத்யாவிடம் அடைக்கலம் கோருகிறார். முதலில் மறுக்கும் சத்யா, பிறகு அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால் மறுநாளே தாரா இறந்து போக, அதிர்ச்சியாகிறார் சத்யா. இதன்பிறகு வரும் சிக்கல்களில் இருந்து சத்யா...