ஆதவ் பாலாஜி-மதுனிகா காதலர்கள். இவர்கள் காதல் தெரிய வந்ததும் நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வன் ஆத்திரமாகிறார். இதனால் பயந்து போன காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். கூடவே நாயகனின் மூன்று நண்பர்களும் செல்கிறார்கள்.
சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் இவர்கள், அந்த வீட்டால் பெரும் பிரச்சினையில் சிக்குகிறார்கள். பிரச்சினையில் இருந்து மீண்டால் போதும் என்று ஆரம்பத்தில் நினைப்பவர்கள், ஒருகட்டத்தில் அதை எதிர்த்து போராடுகிறார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் முயற்சியில் அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதே இந்த ‘மெய்ப்பட செய்’.
நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி, காதலனாகவும் ஜெயிக்கிறார். அடிதடி ஆவேச நாயகனாகவும் ஜெயிக்கிறார்.
நாயகி மதுனிகா அாகிலும் நேர்த்தியான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.
நாயகியின் தாய்மாமனாக வரும் பி.ஆர்.தமிழ் செல்வத்துக்கு வில்லனாக வந்து நல்லவனாக மாறும் வேடம். இ்ந்த நேரெதிர் குணபாவத்தில் ‘அவரா இவர்’ என்ற ஆச்சரியம் தெரிகிறது, நடிப்பில்.
கட்ட கஜா என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபால், சைலண்ட் வில்லன்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வேலின் கேமரா சண்டைக் காட்சிகளில் அளப்பரிய வேகம்..
பரணியின் இசையில் நான்கு பாடல்களும் சுக ராகம்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும். அது மிக கடுமையான தண்டனை யாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதைக்குள், குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற தீர்வையும் சொல்லி முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார், இயக்குனர் வேலன்.

rcinemaதிரை விமர்சனம்ஆதவ் பாலாஜி-மதுனிகா காதலர்கள். இவர்கள் காதல் தெரிய வந்ததும் நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வன் ஆத்திரமாகிறார். இதனால் பயந்து போன காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். கூடவே நாயகனின் மூன்று நண்பர்களும் செல்கிறார்கள். சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் இவர்கள், அந்த வீட்டால் பெரும் பிரச்சினையில் சிக்குகிறார்கள். பிரச்சினையில் இருந்து மீண்டால் போதும் என்று ஆரம்பத்தில் நினைப்பவர்கள், ஒருகட்டத்தில் அதை எதிர்த்து போராடுகிறார்கள்....