இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், ஆடுகளம் நரேன். நடுத்தர குடும்பம். ஆனால் இல்லம் முழுக்க சந்தோஷம். பாசமிகக தந்தை நேசமிகு மகளள் இருக்கிற வீட்டிலே சந்தோஷத்துக் பங்சம்இருக்கழ தானே.

ஆனால் இந்த குடும்பத்திலும் ஒரு விபரீதம் நேர்ந்து குடும்பத்தின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் சிதைத்துப் போடுகிறது. மூத்தமகள் பாவனா ஒரு கூட்டத்திடம் சிக்கி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாக வந்த அதிர்ச்சித் தகவல் அந்த குடும்பத்தில் சூறாவளியை ஏற்படுத்த…

இரவு நடந்த அந்தக் கொடுமைக்கு விடிவதற்குள் நியாயம் கிடைக்கும் என்கிறார், முதலமைச்சர். அதற்கேற்ப அக்குற்றத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி ஐந்து இளைஞர்களை கைது செய்யும் காவல்துறை, அதேவேகத்தில் என்கவுண்டரும் செய்து விடுகிறது.

கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தாரிடம் அவர்கள் உடலை ஒப்படைக்க மறுக்கிறது காவல்துறை, அவர்கள் அதற்காகப் போராடுகிறார்கள்.

நிலைமை விபரீதமாகும் நிலையில், மனித உரிமை ஆணையம் இவ்வழக்கைக் கையிலெடுக்கிறது. விசாரணை அதிகாரியாக வரலட்சுமி ஐ.ஏ.எஸ். வருகிறார்.
வழக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரிடம் விசாரணை நடத்தும் வரலட்சுமி, இந்த என்கவுண்டரில் பல குளறுபடிகள் இருப்பதை கண்டறிகிறார். அநீதி முன் நீதி வென்றதா? என்பது படத்தின் மீதிக் கதை.
மனித உரிமைகள் ஆணையத்தில் சிறப்பு அதிகாரியாக வரும் வரலட்சுமி, தனக்கு கொடுக்கப்பட்ட சிவகாமி ஐ.ஏ.எஸ். கேரக்டரில் கச்சிதமாக பொருந்துகிறார். அதிகம் பேசாமல் விஷயங்களை கிரகித்து முடிவெடுக்கும் அந்த கதாபாத்திரம் உடல் மொழியிலும் கூட வரலட்சுமிக்கு சிறப்பு சேர்க்கிறது.

பாதிக்கப்பட்ட விந்தியா கதாபாத்திரத்தில் பாவனா இன்னொரு நடிப்பு அற்புதம். இந்த கேரக்டரில் இ்ன்னொருவரை யோசிக்க முடியாத அளவுக்கு அனுதாபம் சம்பாதித்து விடுகிறார். அவரின் தங்கை விஜி கேரக்டரில்
எஸ்தர் அனில் சிறப்பு.
தனது மகளுக்கு நடந்ததை எண்ணி அழும் காட்சிகளில் நம்மையும் கலங்க வைத்து விடுகிறார் அப்பா ‘ஆடுகளம்’ நரேன்.
படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார், போலீஸ் அதிகாரியாக வரும் பொன்முடி. படத்தின் மையக்கருவை மிகவும் வலுவாக கையில் எடுத்த இயக்குனர் அமுதவாணன், போலி என்கவுண்டர்கள், அரசியல்வாதிகளின் இன்னொரு முகம், அநீதி இழைக்கப்படும் பெண்களுக்கு நீதி என பல முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்து சாட்டை சுழற்றி இருக்கிறார். குறிப்பாக வசனங்கள் நெத்தியடி.
சிவா பிரபுவின் ஒளிப்பதிவும் ஆலன் செபஸ்டீன் இசைுயும் படத்தின் பக்கத்தூண்கள்.