கல்யாணம் ஆயாச்சு… நடிகர் ஹரிஷ் கல்யாண்- நர்மதா திருமணம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ நடைபெற்றது
நடிகர் ஹரிஷ் கல்யாண்- நர்மதா திருமணம் இன்று திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ நடைபெற்றது. ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
‘பியார்பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், ஓ மணப்பெண்ணே, தாராளபிரபு’ என நடித்த அத்தனையும் வெற்றிப் படங்கள். கூடவே பிக்பாஸ் நிகழ்ச்சியும் அவரை பிரபலமாக்க, இந்நிலையில் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து தனது வருங்கால மனைவி நர்மதாவையும் அறிமுகம் செய்து வைத்தார். அதேநேரம் இது காதல் திருமணம் அல்ல…பெற்றோர் முடிவு செய்த திருமணம் என்பதையும் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.
மணமக்களை உற்றார் உறவினர்களுடன் திரையுலக பிரபலங்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.