பார்த்திபனின் இரவின் நிழலைத் தொடர்ந்து ஒரே ஷாட்டில் உருவான இன்னொரு படம்.

போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் உதவி ஆய்வாளராக பணியில் சேருகிறார், ஜெய் பாலா. அன்றைய தினமே அவரது காதலி காவியா பெல்லுவுக்கு பிறந்த நாள் என்பதால் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இந்த வேளையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் துண்டிக்கப்பட, தலைமைக் காவலராக இருக்கும் இருக்கும் சார்லி கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதை கண்டறிய களம் இறங்குகிறார், இன்ஸ்பெக்டர் கிஷோர். கொலையாளி யார் என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
படத்தில் தெரிந்த முகமாக வருபவர்கள் சார்லியும் கிஷோரும் மட்டுமே.
வந்த கொஞ்ச நேரத்திலும் அனுபவ நடிப்பில் சார்லி பேசப்பட, கிஷோர் அவருக்கே உரிய ஸ்டைலில் துப்பறிந்து ரணகளப்படுத்துகிறார்.
ஜெய்பாலா-காவ்யாபெல்லு காதலில் இளமை கொடி கட்டுகிறது.
காவல் நிலையத்திற்குள் நடக்கும் கதையை மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது ஷினோஸின் ஒளிப்பதிவு. பிஜிபால் இசை சஸ்பென்சுக்கேற்ற பங்களிப்பு.
காவல் நிலையத்தில் முழு படமும் நடப்பது போன்ற கதையை ஒரே ஷாட்டில் படமாக்கி முடிவு வரை பரபரப்பை ரசிகனின் நெஞ்சுக்குள் ஏற்றிய விதத்தில் கவனிக்க வைக்கிறார், அஜி கிளுமலா.