தயாரிப்பு : கிராக்பிரைய்ன் புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள்: விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், ஹரிதாஸ்ரீ, சாய் ரோகிணி, காதல் சரவணன், பிர்லா போஸ் உள்ளிட்ட பலர்.

இயக்கம் : சந்துரு முருகானந்தம்

தற்போதைய தமிழ் திரைப்பட உலகத்தின் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜானரான, திரில்லர் ஜானரில் கொஞ்சம் சஸ்பென்ஸ், கொலைகள், மிஸ்டரி போன்ற விடயங்களை கலந்து குலுக்கி, ரெண்டுகெட்டான் தனமான திரைக்கதையாக தயாராகி இருக்கும் திரைப்படம் தான் நாட் ரீச்சபிள். இது ரசிகர்களுக்கு ரீச் ஆனதா..? ரீச் ஆகவில்லையா..? என்பதை காண்போம்.

கோவையில் இருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, ‘காவலன் செயலி’ மூலம் அழைப்பு ஒன்று வருகிறது. அந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை விசாரணையில் இறங்குகிறது. அதன் போது அங்கே ஒரு பெண் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? செயலி மூலம் அழைப்பு விடுக்கப்பட்ட பெண் அவள் அல்ல என்பது, விசாரணையில் தெரிய வரும் போது, அந்த பெண் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்ற கோணத்தில் விசாரணை தொடங்குகிறது.

இந்த விசாரணையின் தொடக்கத்தில் இயக்குநர் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார். சீருடை இல்லாத துப்பு துலக்கும் பணியில் இருக்கும் ஆய்வாளரான நாயகனும், சீருடையுடன் பணியாற்றும் உதவி ஆய்வாளரான நாயகியும் மணமுறிவு ஏற்பட்டு, விவாகரத்திற்காக காத்திருக்கும் தம்பதிகள் என அமைத்திருக்கிறார். இந்த டிவிஸ்ட்க்கும், திரைக்கதைக்கும் என்ன தொடர்பு? என்பது இயக்குநர் விளக்கமளித்தால் மட்டுமே பார்வையாளர்களால் தெரிந்து கொள்ள இயலும்.

திரைக்கதையில் வர்ஷா என்ற பெண் காணாமல் போகிறார். அவருடைய வீட்டின் தோட்டத்திலிருந்து ராஜலட்சுமி என்ற கதாபாத்திரத்தின் பூத உடலை போலீசார் கண்டறிகிறார்கள். இது தொடர்பான விசாரணையும் தொடர்கிறது.

இந்நிலையில் ஹேமா என்ற பெண் தொடர்ச்சியாக தற்கொலைக்கு முயல்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் காப்பாற்றப்படுகிறார். அவர் ஏன் தொடர்ச்சியாக தற்கொலைக்கு ஈடுபடுகிறார்? என்பதையும் இதே காவல் துறை குழு விசாரிக்கிறது.

மூன்று கொலைகள் அடுத்தடுத்து நடப்பதால் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாயகன் விஷ்வா ஒரு புள்ளியில், ‘திஸ் இஸ் சைக்கோபதிக் சீரியல் கில்லர்’. என்கிறார் அடடே..! தமிழ் சினிமாவின் புதிய டெக்னிக்கல் வார்த்தையாக இருக்கிறது என்று வியந்து பார்க்கும் போது, ‘இடைவேளை’ என்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் கதைக்கான முடிச்சுகளை, இயக்குநர் நிதானமாக நாயகன் (?) மூலமாக விடுவிக்கிறார். இறுதியில் ஹேமா என்ற கதாபாத்திரம் தன் பாலின சேர்க்கை விரும்பி என்றும், அவருக்கு இடையூறு செய்பவர்களை கொலை செய்பவர் என்றும் சொல்லி, ‘திஸ் இஸ் நாட் ரீச்சபிள்’ என்கிறார்கள். உச்சகட்ட காட்சியில் இயக்குநர் சொல்லியிருக்கும் டிவிஸ்ட்டாவது எதிர்பாராத வகையில் புதிதாக இருக்கும் என்ற பார்வையாளனின் எதிர்பார்ப்பு… ஏமாற்றத்தில் நிறைவடைகிறது.

படைப்பு குறித்து இயக்குநர் மற்றும் படக்குழுவினரிடம் விசாரிக்கும் முன், ‘போதுமான செலவில் உருவான படைப்பு’ என்ன பதில் வருகிறது.

இதனால் படத்தில் நடித்த நாயகன், நாயகி, இசை, ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை… இது குறித்து விரிவாக விவாதிக்கவோ, விமர்சிக்கவோ இயலாத சூழல் உருவாகிவிட்டது.

இருப்பினும் இன்றைய சூழலில் நாயகன் விஷ்வா உள்ளிட்ட படக்குழுவினர் துணிச்சலுடன் நாட் ரீச்சபிள் என்ற படைப்பை உருவாக்கி அதனை திரையரங்குகளில் வெளியிட வைத்ததையே சாதனை எனக் கருதி பாராட்டலாம்.

பூத கண்ணாடியை கொண்டு படத்தின் நிறைகளை உற்று நோக்கினால், ஃபோக்கசில் நாயகன் விஷ்வா, நாயகி சுபா தேவராஜ், நடிகை சாய் தன்யா ஆகியார் மட்டுமே பளிச்சென்று தெரிகிறார்கள். இவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஷொட்டு.

நாட் ரீச்சபிள் – நத்திங் ரீச்சபிள்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/maxresdefault-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/maxresdefault-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தயாரிப்பு : கிராக்பிரைய்ன் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள்: விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், ஹரிதாஸ்ரீ, சாய் ரோகிணி, காதல் சரவணன், பிர்லா போஸ் உள்ளிட்ட பலர். இயக்கம் : சந்துரு முருகானந்தம் தற்போதைய தமிழ் திரைப்பட உலகத்தின் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜானரான, திரில்லர் ஜானரில் கொஞ்சம் சஸ்பென்ஸ், கொலைகள், மிஸ்டரி போன்ற விடயங்களை கலந்து குலுக்கி, ரெண்டுகெட்டான் தனமான திரைக்கதையாக தயாராகி இருக்கும் திரைப்படம் தான் நாட் ரீச்சபிள். இது ரசிகர்களுக்கு ரீச்...