ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரஷிய அமைச்சர் இப்படி அடுத்தடுத்து உலகமே அதிரக்கூடிய வகையில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து கொலை செய்கிறார் விக்ரம்.
உள்ளூர் காவல்துறை முதல் உலகக் காவல்துறையான இண்டர்போல் வரை அவரைத் தேடுகிறது.
விக்ரம் பிடிபட்டாரா? அவர் ஏன் அந்தக் கொலைகளைச் செய்கிறார்? கேள்விக்கான விடை தான் இந்த கோப்ரா.
படம் முழுக்க விக்ரம் ஆதிக்கம் தான். இரண்டு வேடங்கள், அதில் பலவித தோற்றங்கள் என காட்சிக்கு காட்சி நடிப்பில் பிரமிப்பு எற்படுத்துகிறார். குறிப்பாக ஸ்காட்லாந்து இளவரசரை கொல்லும் இடத்தில் அவரது தோற்றமும் நடிப்பும் ஆஹா ரகம்.
கே.ஜி.எஃப். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு விக்ரமை துரத்தித் துரத்திக் காதலிக்கும் வேடம். விக்ரம் அவரைப் புறக்கணிக்கும் இடங்களில் அந்த தவிப்பும் துடிப்பும் ஷெட்டியை நடிப்பில் கெட்டி என்று சொல்ல வைக்கிறது.
கணிதமேதையாக வந்து இன்டர்போல் அதிகாரியுடன் துப்பறிய வரும் மீனாட்சி கோவிந்தராஜன் துறுதுறு நடிப்பில் கவர்கிறார். அதிகார பலமிக்க குடும்பத்துப் பெண்ணாக வந்து காதலில் கசிந்துருகும் கேரக்டரில் மிருணாளினி ரவி நெஞ்சில் தேங்கி விடுகிறார்.
இண்டர்போல் ஆபீசராக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான். முதல் படம் என்ற பதட்டமே இல்லாமல் நடிப்பில் சிக்சர் அடித்திருக்கிறார்.
வில்லனாக ரோஷன் மேத்யூ. கிளைமாக்சில் விக்ரம்களுடன் மோதும் இடத்தில் ‘வில்லன்டா!’
பத்திரிகையாளராக கே.எஸ்.ரவிக்குமார், இளவயது விக்ரமாக சர்ஜானோ காலித் பொருத்தமான பாத்திரத்தேர்வில் பளபளக்கிறார்கள். குணசித்ரத்தில் ரோபோசங்கரும், காமெடியில் ஆனந்தராஜூம் வில்லத்தனத்தில் ஜான்விஜய்யும் அனுபவ நடிப்பில் தங்கள் இருப்பை நிரூபிக்கிறார்கள்.
ஏ,ஆர்.ரகுமானின் இசையில் தரங்கிணி, தும்பி பாடல்கள் சுகராகம்
ஹரீஷ்கண்ணனின் ஒளிப்பதிவில் வெளிநாடுகளின் பிரமாண்டங்கள் ஆச்சரிய மிரட்டல். குறிப்பாக அந்த ஸ்காட்லாந்து இளவரசர் திருமண காட்சியில் நம்மையும் அங்கே இடம் பெயர்த்துக் கொண்டு போய் விடுகிறது, இவரது கேமரா.
உலகை ஆளும் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமட்ட செயல்பாடுகளை அம்பலப்படுத்தியிருக்கும் திரைக்கதைக்குள் பாசமிகு இரு சகோரர்களின் கதையை இணைத்த விதத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனித்து தெரிகிறார். கணித மேதையின் திறமையை கதைக்களமாக்கிய விதத்திலும் அவர் போட்ட கணக்கு தப்பவில்லை. அதேநேரம் படத்தின் நீளக்கணக்கு மட்டும் இடிக்கிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/0ed3e60c-c6c5-4fa3-a791-5552f5048faa-819x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/09/0ed3e60c-c6c5-4fa3-a791-5552f5048faa-e1662128544805-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரஷிய அமைச்சர் இப்படி அடுத்தடுத்து உலகமே அதிரக்கூடிய வகையில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து கொலை செய்கிறார் விக்ரம். உள்ளூர் காவல்துறை முதல் உலகக் காவல்துறையான இண்டர்போல் வரை அவரைத் தேடுகிறது. விக்ரம் பிடிபட்டாரா? அவர் ஏன் அந்தக் கொலைகளைச் செய்கிறார்? கேள்விக்கான விடை தான் இந்த கோப்ரா. படம் முழுக்க விக்ரம் ஆதிக்கம் தான். இரண்டு வேடங்கள், அதில் பலவித தோற்றங்கள் என காட்சிக்கு காட்சி நடிப்பில்...