ஷாந்தனுவிற்கும் அதுல்யாவிற்கும் திருமணம் முடிந்து முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது ஷாந்தனுவை சந்திக்கும் அவரது தாத்தா பாக்யராஜ் ‘திருமணத்தன்று முதலிரவு நடக்கக் கூடாது. ஆனால், புதுமணத் தம்பதிகள் ஒரே அறையில் இருக்க வேண்டும். இதை மீறினால் என் சொத்தை தர்மத்துக்கு எழுதி வைத்து விடுவேன்’’ என்கிறார். இதே சமயத்தில் மணப்பெண் அதுல்யாவை சந்திக்கும் அவரது அத்தை ஊர்வசியோ, “திருமணத்தன்று முதலிரவு நடக்காவிட்டால் நம் குல வழக்கப்படி குழந்தை பிறக்காது. அதனால எப்டியாது உறவு கொள்ளணும்’ என்க…

தம்பதிகள் இருவரும் தங்கள் குடும்ப பெரியவர்கள் சொன்னதை நிறைவேற்ற படாதபாடு படும் கதை தான் இந்த சிப்ஸ்.

நாயகன் சாந்தனு துறுதுறு இளைஞனாக நடித்து கவர்கிறார். நாயகி அதுல்யா ரவி இளமையும் அழகுமாய் பொங்கி வழிகிறார். இவர் மறுக்க, அவர் நெருக்க, இளமை ஊஞ்சல் ரசிகன் மனதில் வேகமாக ஆடிக்கொண்டிருக்கிறது. பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஸ்காந்த் காமெடிக்கு காமெடி. கலகல அதிரடி.

முதலிரவை மையக்கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர். படம் முழுக்க முழுக்க ஒரே இரவில் நடக்கிறது. அதை வித்தியாச கோணங்களில் படம் பிடித்து தன் இருப்பை நிரூபிக்கிறார், ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்ரவர்த்தி. தரண்குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும்போதே நெஞ்சுக்குள் இறங்கி விடுகிறது.

நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் சில மட்டுமே சிரிப்ஸ். பல கடுப்ஸ். கிளைமாக்ஸ் இன்ப அதிர்ச்சி.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/cropped-FFwiXGlUcAAIw40-1024x512.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/cropped-FFwiXGlUcAAIw40-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்ஷாந்தனுவிற்கும் அதுல்யாவிற்கும் திருமணம் முடிந்து முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது ஷாந்தனுவை சந்திக்கும் அவரது தாத்தா பாக்யராஜ் ‘திருமணத்தன்று முதலிரவு நடக்கக் கூடாது. ஆனால், புதுமணத் தம்பதிகள் ஒரே அறையில் இருக்க வேண்டும். இதை மீறினால் என் சொத்தை தர்மத்துக்கு எழுதி வைத்து விடுவேன்’’ என்கிறார். இதே சமயத்தில் மணப்பெண் அதுல்யாவை சந்திக்கும் அவரது அத்தை ஊர்வசியோ, 'திருமணத்தன்று முதலிரவு நடக்காவிட்டால் நம் குல வழக்கப்படி குழந்தை பிறக்காது....