ஒரு நபருக்கு ஓரு நாள் நடந்த நிகழ்வுகள், தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை ‘டைம்-லூப்’ என்கிறார்கள். இந்த டைம்-லூப்பை மையப்படுத்தி ஹாலிவுட்டில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்திய சினிமாவில் கடந்த வாரம் ‘ஜாங்கோ’ இந்த வாரம் ‘மாநாடு.’
டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் நாயகன், அதன் மூலம் ஆபத்தில் இருக்கும் ஒரு மாநில முதல்வரை காப்பாற்றும் முயற்சியில் இறங்க, அதில் அவர் வெற்றி பெற்றானா இல்லையா, என்பது ‘மாநாடு’ படத்தின் கதை.
துபாயில் பணியாற்றும் சிம்பு, தன் நண்பனின் திருமணத்திற்காக விமானத்தில் கோவை வருகிறார். திருமணம் செய்யப்போகும் பெண்ணை கடத்தி அவளை காதலிக்கும் தன் நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைப்பது அவர் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக திருமணப் பெண்ணை கடத்தி செல்லும் வழியில் காரில் ஒருவன் அடிபட…
இந்த விபத்து மூலம் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவிடம் சிம்பு தனது நண்பர்களுடன் மாட்டிக் கொள்கிறார். நண்பர்களை பணயக் கைதியாக வைத்து முதலமைச்சரை கொலை செய்யச் சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நண்பர்களை காப்பாற்ற வேறு வழியில்லாமல் முதலமைச்சரை சுட்டுக் கொல்கிறார் சிம்பு. அடுத்த கணம் போலீஸ் சிம்புவை கொன்று விடுகிறது.
விழித்துப் பார்த்தால் மீண்டும் கோவை விமானத்தில் சிம்பு இருக்கிறார். அப்படியானால் நடந்து முடிந்த சம்பவம்? அப்போதுதான் தான் ஒரு Time – loopல் சிக்கியிருப்பது புரிகிறது. இதையடுத்து தானும் தப்பிக்க வேண்டும், முதலமைச்சரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக காலிக் மேற்கொள்ளும் முயற்சிகளே மீதிப் படம்.
சிம்புவின் திரை வாழ்க்கையில் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். தன்னை எந்த இடத்திலும் முன்னிலைப் படுத்தாமல், கதை மற்றும் கதைக்கு தேவையான கேரக்டர்களோடு பயணித்திருக்கும் சிம்பு, ஒரு நடிகராக வார்த்தெடுத்த நடிப்பை கொடுத்திருக்கிறார். நண்பர்கள் உயிரை காப்பாற்ற வில்லனிடம் பணிவதில் அந்த கேரக்டர் நிமிர்ந்து நிற்கிறது. வாகை சந்திரசேகரின் உயிரைக் காப்பாற்ற விமான நிலையத்தில் இருந்து ஒடும் அந்த ஒட்டம் நடிப்பு ரேசில் சிம்புவும் வந்து விட்டார் என்பதை நமக்கு உற்சாகமாக அறிவிக்கிறது.

கெட்ட போலீசாக வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்த படம் மாபெரும் ஜாக்பாட். தனது கொலை திட்டம் நிறைவேற அவர் ஒவ்வொரு முறையும் சிம்புவை காப்பாற்றத் துடிக்கும் காட்சிகளில் மனிதர் நடிப்பில் பிய்த்து உதறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் ஆளும் அழகு. நடிப்பும் அழகு.
முதல்வர் வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், முக்கிய அமைச்சர் வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரா கவனிக்க வைக்கிறார்கள். வில்ல போலீஸ் மனோஜ் பாரதி, நல்ல அரசியல்வாதி வாகை சந்திரசேகர், நண்பர்கள் உதயா, பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா படத்தின் இன்னொரு நாயகன். பின்னணி இசையில் முழுப்படத்திலும் பிரமிப்பு காட்டுகிறார்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன், மாநாடு சம்பந்தப்பட்ட காட்சிகளில் பிரமாண்டம் காட்டுகிறார்.
படத் தொகுப்பில் இது பிரவீனுக்கு நூறாவது படம். டைம் லூப் கதையை புரிந்து கொள்ளும் விதத்தில் தொகுத்ததற்கு ஸ்பெஷல் பாராட்டு.

இம்மாதிரியான ஒரு கதையில் கொஞ்சம் அசந்தாலும் ரசிகன் குழம்பிப் போவான். ஆனால் எவ்வித குழப்பமும் இல்லாமல் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றதற்காகவே உச்சி முகர்ந்து பாராட்டலாம், இயக்குனர் வெங்கட்பிரபுவை.
மாநாடு, வரலாறு.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/movie_1189_maanaadu-photos-images-5838-709x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/movie_1189_maanaadu-photos-images-5838-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்நடிகர்கள்ஒரு நபருக்கு ஓரு நாள் நடந்த நிகழ்வுகள், தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை ‘டைம்-லூப்’ என்கிறார்கள். இந்த டைம்-லூப்பை மையப்படுத்தி ஹாலிவுட்டில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்திய சினிமாவில் கடந்த வாரம் ‘ஜாங்கோ’ இந்த வாரம் ‘மாநாடு.’ டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் நாயகன், அதன் மூலம் ஆபத்தில் இருக்கும் ஒரு மாநில முதல்வரை காப்பாற்றும் முயற்சியில் இறங்க, அதில் அவர் வெற்றி பெற்றானா இல்லையா, என்பது ‘மாநாடு’ படத்தின் கதை. துபாயில் பணியாற்றும்...